இன்றைய தகவல்யுகம் நாளுக்கு நாள் நமது 'மூளை'யை சுயமாக இயங்கவிடாமல் செயழிலக்கச் செய்து வருகின்ற இக்காலக்கட்டத்தில், வாசிப்பை வலியுறுத்துமுகமாக, எல்லோர் மத்தியிலும் வாசிப்பை வலுப்படுத்தும் முகமாக நாடளாவியரீதியில் கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல்வேறு கலந்தாய்வுகள், செயலமர்வுகள் நடைபெற்றதோடு பல்வேறு பத்திகளும் பதிவுகளையும் அவதானிக்க முடிந்தது. எல்லோரும் வாசிப்பைப் பற்றி யோசிக்கின்றோம். எல்லோரும் வாசித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், வாசிப்பின் மூலம் பூரண மனிதனாகுகின்றோமா? இவ்வாறு ஒரு கேள்வி வருமானால், இதனை மீளாய்வு செய்ய வேண்டிய தேவையுள்ளது. எல்லோரும் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது மனநிலையில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது....