அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை காட்டும் சர்வதேச வருடாந்த திருவிழா முடிவடைந்து இன்றுடன் மூன்று நாட்கள். ஒரு காலத்தில் தொழிலாளர்களுக்கான தினமாக இருந்த இந்நாள் தற்போது யார் அதிகளவான கூட்டம் சேர்க்கும் கட்சிகள் என போட்டித்தன்மையை உருவாக்கியுள்ள தினமாக மாறிவிட்டதை நாம் கண்கூடாக பார்க்கக் கூடியதாக மாறிவிட்டது. ''கடந்த வருட மேதினத்தை விட இவ்வருட நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலானோர் ஆர்வமாகவும் அக்கறையுடனும் கலந்துகொண்டிருக்கின்றனர்'' என்று அந்தந்த கட்சித் தலைமைகள் பகிரங்கமாக உரையாற்றி அதனை உறுதிசெய்திருந்தார்கள். சினிமாவில் சுப்பர் ஸ்டார் அடிக்கடி பேசும் "இது நானா சேர்த்த கூட்டமில்ல: தானாக...