ஜீவா சதாசிவம்மாவிலைக் கும்பமில்லை. மங்கல குத்து விளக்குமில்லை. மாறாக கரம் கூப்பி வணக்கம் சொல்ல ஒருவர். கைகளில் கிருமிநாசினி தெளிக்க ஒருவர், வரவேற்கப்படுபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து ஒரு தாளில் குறித்து ஒருவர் தர வந்தவர் அதனை நிரப்பி விழா ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.இதுதான் கலாசாரமா என்று கேட்டவருக்கு 'கொரோனாவுக்கு பின்னான கலாசாரம்' என எளிமையாக பதில் அளித்துவிட்டு வழமைபோலவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் நூலாசிரியர் மல்லியப்புசந்தி திலகர். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் இல்லாதபோதும் கடைபிடிக்கும் அதே எளிமையும் இன்முகமுமாய் வந்தவர்களையும் வரவேற்றுக்கொண்டு ஒழுங்கமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிக்...