மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும் வரை அரசியலில் தொங்கிக் கொண்டிருப்பதை நாம் அவதானிக்கின்றோம். இதனால், பல அவதூறுகளையும் அவர்கள் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஒருவருக்கு அரசியலில் முதிர்ச்சி இருக்கின்றதோ இல்லையோ ஆனால், அவர்கள் தாங்கள் முதுமை அடையும் வரை தொடர்ச்சியாக அரசியலில் தம்மை தக்க வைத்துக்கொள்வதற்கான முஸ்தீபுகளை கையாள்வதை இலங்கை, அரசியலில் நீண்ட காலமாக அவதானிக்கலாம். இதனை ஏன் அலச வேண்டிய தேவை ஏற்பட்டது என்று நினைக்கின்றீர்களா? நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ஜோன் கீ கடந்த வருட இறுதியில் தான் பதவி...
இவ்வார பத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி நிலை பற்றி சில விடயங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 25பேர் மாத்திரமே பட்டதாரிகள் என்றும் 94 பேர் சாதாரண தரத்தில் கூட சித்தியடையவில்லை என்றும் அண்மைய ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.ஓ.ஏ. டீ. சொய்ஸா இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வு தொடர்பான விடயங்கள் வெளி வந்த பின்னர், ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை சீருடையில் மாணவர்களாக தம்மை உருவகித்துக்கொண்டு கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றிருந்தார்கள். இதனை முகநூலில் வெளியான சில புகைப்படங்கள் மூலம் பார்க்கக்கூடியதாக...
இந்தவாரம் முதல் பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரவுள்ள இந்த அரசியல் பத்தி'யின் முதலாவது அங்கத்தில் ஒரு பெண் அரசியல் ஆளுமையாக தன்னை அரசி யலில் கால்பதிக்கச் செய்திருக்கும் இளம் அரசியல்வாதி பற்றி ஆராய்கின்றது. மகளிர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது அரசியலில் பெண்கள்', 'பெண்களின் அரசியல் பிரவேசம்' பற்றி ஆழமான கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல்லின மக்கள் வாழ்கின்ற அரசியல் சூழல் சற்று வித் தியாசமானதே. மகளிருக்கான மாதமாக மார்ச் மாதம் அமைவது புதிதான விடயம் அல்ல. என்றாலும் கூட இம்மாதத்தில் அரசியலில் பெண்களின்...