''எமது நாட்டிலுள்ள பாராளுமன்றமே ஆசியாவில் பழமையான பாராளுமன்றம் என்று'' பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த பழமையான பாராளுமன்றம் நேற்று (03.10.2017) தனது 70ஆவது அகவையை கொண்டாடும் முகமாக விசேட அமர்வையும் நடத்தியது. அகவை 70 ஐ கொண்டு வயதில் முதிர்ச்சி பெற்றிருந்த்போதிலும் அது இலங்கையில் இரண்டாவது இனமான சிறுபான்மை சமூகத்தினர் மீது எவ்வாறான பார்வையை கொண்டிருந்தது. அதன்மூலம் சிறுபான்மை சமூகத்தை எவ்வாறான செல்நெறியில் கொண்டு சென்றது என்பது பற்றியே இவ்வார 'அலசல்' ஆராய்கிறது. ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் உச்ச சட்டவாக்க பீடமாகவும் அதியுயர் சபை...