நூல் வெளியீடு... கடந்த இரண்டாண்டு காலமாக வீரகேசரி நாளிதழில் பிரதி வியாழன் தோறும் வெளிவந்த அரசியல் ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் எழுதிய அரசியல் பத்திகளின் தொகுப்பு ‘அலசல்’ (சமகால அரசியல் நிலைவரங்கள் 2017/2018) எனும் தலைப்பிலேயே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. குமரன் பதிப்பகத்தின் வெளியீடாக 309 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்த நூல் 64 அரசியல் கட்டுரைகளைக் கொண்டது. வெளியீட்டு விழா 22- –11–2018 வியாழன் அன்று சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் வாழ்த்து, வரவேற்புரை... நிகழ்வு மங்கள விளக்கேற்றல், ஆசிரியை...