நான் ஒரு சிறந்த கதை சொல்லியாக இருக்க விரும்புகிறேன் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் April 23, 2018
பிரபல தென்னிந்திய இயக்குநரான பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பான  இளம் இயக்குநர்  மீராகதிரவன் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் சர்வதேச மட்டத்திலும் இரசிகர்கள் மத்தியில் இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ளார்.  சினிமாவில் தான் இயக்குநராக வரவேண்டும் என்று தீவிர எண்ணத்துடன் இளம் வயதிலேயே தங்கர்பச்சனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் மீரா. மலையாளப் படங்களில் ஆர்வம் கொண்டு அதற்காகவே மலையாளத்தையும் கற்றுக்கொண்ட இவர் சிறந்த இலக்கியவாதியும் கூட.   இயக்குநராவதற்கு இலக்கியம் அவசியமில்லை என்ற போதிலும் ஒரு நல்ல இயக்குநராவதற்கு இலக்கிய பரிச்சயம் அவசியம் என்கிறார் மீரா.  இலக்கியம் ,திரைப்படம் ஆகியவை தனித்துவமான குணங்களோடு இயங்குபவை....

அரசியலில் பெண்களும் வன்முறைகளும் - ஜீவா சதாசிவம்

அலசல் April 07, 2018
இலங்கை அரசியலில் பெண்களின் பங்கேற்பு சம்பந்தமாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலோடு கூடிய கவனம் திரும்பியது. உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பெண் உறுப்பினர்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு காரணமாக நிறை குறைகளுக்கு அப்பால் பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பங்கேற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் அரசியல் கட்சிகளுக்கு உள்ளேயும் அரசியல் கட்சிகளுக்கி டையேயும் இடம்பெறும் வாத, விவாதங்கள் கைகலப்பாகவும் வன்முறைகளாகவும் மாறி விடுவதுண்டு.  வாத விவாதங்களின் போதல்லாமல் அரசியல் அதிகாரம் இருப்பதன் காரணமாக அதிகாரம் கொண்டோர் பலவிதமான வன்முறைகளில் ஈடுபடுவதை அவதானித்திருக்கிறோம். கடந்த மாதம் ஒரு...

கண்கலங்க வைத்த சாவித்திரி கதாப்பாத்திரம் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் April 03, 2018
எங்களது ஊரில் நிகழ்த்தப்படும்  கூத்துக்கலைகளை பார்த்து மனம் மகிழ் வடையும் ஒரு காலம் இருந்தது. அந்த மகிழ்வை மீண்டும் அனுபவித்த ஒரு மனநிலைமை  கடந்தவாரம்  கிடைத் தது. அந்த மகிழ்வு சாவித்திரி மூலம் கிடைத்தது.   ஆம்! கடந்த சனிக்கிழமை (24.03.2018)  'சத்தியவான் சாவித்திரி' என்னும் இசை நாடகத்தை பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். 'சத்தியவான் சாவித்திரி' கதைகளை புராணங்களில் படித்ததுண்டு. சிவாஜி கணேசன் நடித்த சினிமாவில் பார்த்ததுண்டு. ஆனால், நேரில் இக் கதையை உயிர்த்துடிப்புடனான கதாபாத்திரங்களினூடாக பார்க்கக் கிடைத்தமை மனதுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.  கொழும்பு தமிழ்ச்சங்கத்தால் நடத் தப்பட்ட நிறுவுனர்...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images