ஒவ்வொரு சர்வதேச தினம் வரும் போதும் அந்தந்த விடயங்கள் 'உரிய தினத்தில்' மாத்திரம் நினைவுபடுத்தப்படுவது போல கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அதுவும் அது காலாவதியாகும் சில வாரங்களுக்கு முன்பிருந்து மாத்திரம் பேசப்பட்டு வருவது வழமையாகி விட்டது. அது போல்தான் 2016ஆம் ஆண்டு ஒக்டோ பரில் செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில், அது பற்றிய பேச்சுவார்ததைகள் சுற்றுக்களின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் அதுவும் ஒரு பழைய பல்லவியே. ஒவ்வொரு ஒப்பந்தக் காலப்பகுதியில் பேசப்படும் விடயங்களே தற்போதும் மீள் சுழற்சி முறையில்...
"ஊடகம் என்பது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் பொறுப்புடையதும் விழுமியங்களைக் கொண்டதுமானதாக இல்லாதபோது ஊடகவியலின் சக்தி பற்றிய வினா எழுப்புவதில் அர்த்தமில்லை" என்கிறார் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்குமான கனடாவின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொபி மென்டேல். மேற்படி கருத்து நிலையில் நின்று ஊடகவியலையும் அதன் தற்காலப் போக்கையும் அலசி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகிறது. கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெற்ற "ஊடக சுதந்திரத்துக்கும் சமூகப்பொறுப்புக்குமான கொழும்பு பிரகடனம்" என்னும் சர்வதேச மாநாட்டில் பிரதான பேச்சாளராக கலந்துகொண்ட ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்குமான கனடாவின் மத்திய நிலையத்தின்...