கூட்டு ஒப்பந்தம் ஒன்றா? இரண்டா? - ஜீவா சதாசிவம்
October 19, 2018
ஒவ்வொரு சர்வதேச தினம் வரும் போதும் அந்தந்த விடயங்கள் 'உரிய தினத்தில்' மாத்திரம் நினைவுபடுத்தப்படுவது போல கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அதுவும் அது காலாவதியாகும் சில வாரங்களுக்கு முன்பிருந்து மாத்திரம் பேசப்பட்டு வருவது வழமையாகி விட்டது. அது போல்தான் 2016ஆம் ஆண்டு ஒக்டோ பரில் செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில், அது பற்றிய பேச்சுவார்ததைகள் சுற்றுக்களின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் அதுவும் ஒரு பழைய பல்லவியே.
ஒவ்வொரு ஒப்பந்தக் காலப்பகுதியில் பேசப்படும் விடயங்களே தற்போதும் மீள் சுழற்சி முறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களும் தமது சமபளப் பணம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் நாளாந்தம் ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கின்றனர்.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் மிக முக்கியக் கூறாக விளங்கும் தேயிலை தொழிற்றுறையினர் மாத்திரம் தமது நாளாந்த வேதன அதிகரிப்புக்காக ஒவவொரு காலத்திலும் வீதிக்கு இறங்கி தமது கோரிக்கைகளை முன்வைத்து கடைசியில் ஏமாற்றமடைந்தும் விடுகின்றனர். இவவாறான தொடர் நிலை பெரிதும் கவலைக்குரியதே...
இந்நிலையில், தற்போது கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனோடு இணைந்து இனனுமொரு ஒப்பந்தத்திலும் தாம் கைச்சாத்திடுவதாகவும் அதில் நாட் சம்பளம் தவிர்ந்த ஏனைய விடயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஆராய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்து வருவதாகவும் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சஙக.ே த்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித் துள்ளார்.
இவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இருப்பின் அதன் முக்கியத்துவம் குறித்தே இந்த வாரம் அலசல் ஆராய்கிறது.
கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்தே முழுமையான ஊடகக் கவனம் திரும்பியிருக்கும் இந்த நாளில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வெளிப்படுத்தியிருக்கும் இந்த இரண்டாம் ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் மிக முக்கியமானவை. ஒப்பந்தத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினருமே இந்த இரண்டாம் ஒப்பந்தம் பற்றி வெளியே விடாது இருந்தனர். இப்போது ஒப்பநதத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பிலிருந்து இந்தத் தகவல் கசிந்திருப்பது அத்தகைய ஒப்பந்தம் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
அத்தகைய ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றி ஊகிக்கக் கூடியதாக உளளது. சம்பளம் தவிர்ந்த பிற விடயங்கள் குறித்து அதில் பேசப்பட்டு இருக்கலாம். அத்தகைய பிற விடயங்களுக்கு கம்பனிகள் தமது நிதியை ஒதுக்குவதாகக் காரணம் காட்டி நாட் சமபளத் தொகையை அதிகரிக்க மறுக்கின்றன. கம்பனிகளின் ஆண்டறிக்கையில் காட்டப்படுகின்ற இலாப புள்ளி விபர ங்களும் சமபளப் பேச்சுவார்ததைகளில் அவர்கள் கூறும் கதைகளும் முரண்பட்டவை. எனவே இரண்டாம் ஒப்பந்தம் குறித்த விடயங்கள் வெளிப்ப டுத்தப்படல் வேண்டும்.
கூட்டு ஒபபந்த முறை மீளாய்வு செய்யப்படல் வேண்டும் என 2016ஆம் ஆண்டு பாராளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கூட்டு ஒபபந்தம் செய்யப்பட்ட கால இடைவெளி களையும் அதில் காணப்படும் முரண்பாடான விபரங்களையும் சுட்டிக்காட் டியிருந்தார்.
அந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பேோது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுபபினர் வடிவேல் சுரேஷ் கூட்டு ஒபபந்தம் கைச்சாத்திடப்பட்டு உரிய சமபளம் வழங்கப்படாத விடத்து தான் சபையில் தீமூட்டி தறகொலை செய்வதாக அதிரடியாகத் தெரிவித்தார். அன்று கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணையைவிட பெற்றோல் விடயமே அன்று பிரபலமானது. ஏன் இன்றும் கூட 'பெற்றோல்' விடயம் பிரபலமாகவே உள்ளது.
இன்றும் கூட வேறு யார் மறந்தாலும் அவரே அவ்வப்போது அந்தப் பெற்றோல் விடயத்தையும் தனது தீககுளிப்பு அறிவிப்பையும் விடுவதாக இல்லை. கடந்த வாரம் பண்டாரவளை அம்பிட்டிகந்த இளஞ்செழியன்புரம் வீடமைப்புத் திட்ட திறப்பு விழாவின்போதும் இந்தப் பெற்றோல், தீக்குளிப்பு விடயங்களை அவர் நினைவுப்படுத்திப் பேசியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனோடு இணைந்து இனனுமொரு ஒப்பந்தத்திலும் தாம் கைச்சாத் திடுவதாகவும் அதில் நாட் சமபளம் தவிர்ந்த ஏனைய விடயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை ஆராய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத் திடும் தொழிற்சங்கங்கள் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்து வருவதாகவும் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சஙகத்தின் பொதுச் செயலாளரும் வடிவேல் சுரேஷ் எம்.பி. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தும் உள்ளார் .
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தரப்பு என்கின்ற நிலையில் இருந்து கொண்டு வடிவேல் சுரேஷ் விடுத்திருக்கும் இந்த அறிவிப்பு முக்கியமானது. இதுவரை காலம் கைச்சாத்திட்ட தரப்பு வெளியிடாத ஒரு விடயத்தை வெளியே கொண்டு வந்தமைக்கு அவர் பாராட்டப்பட வேண்டியவராக இருந்தாலும் வெறுமனே அதனைச் சொல்லிவிட்டுப் போகாமல் வெளிப்ப டுத்த வேண்டிய கடப்பாடும் இருககின்றது.
அது மாததிரமன்றி பெற்றோல் கொண்டுவருவதற்கு காட்டுகின்ற ஆர்வத்தைக் குறைத்து அதற்குப் பதிலாக இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் சபையில் சமர்ப்பித்தால் அது விவாதத்துக்கு உள்ளாகும். அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சமபளப் பேசசுவார்த்தையில் முக்கிய திருப்பத்தை ஏறபடுத்த முடியும்.
இது இவவாறிருக்க, தீபாவளி முற்பணம் பததாயிரம் பெறறுக்கொடுக்க உத்தேசித்துள்ள அறிவிப்பும் தற்போது வெளி வந்துள்ளது. ஏற்கெனவே தான் பிரதமரைச் சந்தித்து தீபாவளி முற்பணம் ரூ.10,000/---= பெற்றுக்கொடுக்க கலந்துரையாடியதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஊடகங்களுக்கு அறிவித்ததும், இலங்கைத் தொழிலாளர் காஙகிரஸும் கமபனிகளிடம் பேசி அதனைப் பெற்றுக்கொடுப்பதாக அதன் உப தலைவர் எஸ். அருள்சாமி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கூடவே அத்தகைய கோரிக்கைகளை முதலாளிமார் சமமேளனத்திடமும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திடமும் தாம் கோரியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் எழுதிய கடிதமும் இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான கடிதங்கள் எல்லாம் வெளியே வரும் போது இரண்டாம் ஒப்பந்தம் ஒன்று இருந்தால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் அதனை வெளிப்படுத்த வேண்டும். இது குறித்தும் ஊடகங்கள் தமது கவனத்தை அதிகம் காட்டுவது அவசியம். இரண்டாவது ஒப்பந்தத்தை வெளியே கொண்டு வருவதற்கும் மக்களின் சார்பாக ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும். கூட்டு ஒப்பந்த முறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்த இரண்டாவது ஒப்பந்த ஷரத்துகள் பயன்படக் கூடும்.
நன்றி வீரகேசரி - 18.10.2018
0 comments