ஜீவா சதாசிவம் ‘கரிகாற்சோழன்’ விருது பெறும் தி.ஞானசேகரனின் 'எரிமலை' நாவல் ஈழத்து இலக்கிய உலகில் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இன்றும் இயங்கி வருபவர் டாக்டர். ஞானம் ஞானசேகரன். எழுத்தாளர், பதிப்பாளர், ஆசிரியர் எனும் பண்முக ஆளுமைகொண்ட டாக்டர் ஞானசேரனுக்கு 2018 ஆம் ஆண்டுக்காண ‘கரிகாற்சோழன்’ விருது வழங்கப்படவுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல் நாட்டுக் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாக நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் அளிக்கப்படும் வருடாந்தம் வழங்கப்பட்டு வரும் விருதின் 2018ஆம் ஆண்டுக்கான விருது ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான DR. ஞானசேகரத்தின் எரிமலை நாவலுக்கு வழங்கப்படவுள்ளது....
கொரோனா காலத்து அறுவடையாக 'அறிந்திரன்' யாழில் இருந்து வெளி வருகின்றது. சிறுவர்களுக்கான மாதாந்த சஞ்சிகையாக பல் சுவை அம்சங்களைக் கொண்டதாக இருக்கின்றது. அச்சு ஊடகங்களில் நவீன யுகம், கொரோனா யுகம் என்பவை தாக்கத்தை செலுத்தி வருகின்ற நிலையில், சிறுவர்களுக்கென மாதாந்தம் இவ்வாறானதொரு சஞ்சிகையை வெளிக்கொணர எத்தணித்த பொறுப்பாசிரியர் கணபதி சர்வாணந்தா துணிச்சல் மிக்கவர் தான். கொரோனா காலத்தையொட்டி பல சிற்றிதழ்கள் மூடுவிழா கண்டு வருகின்ற நிலையில், இக்கால இடைவெளியில் குழந்தைகளின் அறிவுபசிக்கு தீனி போடும் வகையில் 'அறிந்திரன்' வெளிவந்துள்ளது. இந்நெருக்கடியான கால கட்டத்தில் இவ்வாறானதொரு சஞ்சிகையை வெளியிட எத்தணித்தமைக்கான காரணம் பற்றி பொறுப்பாசிரியரிடம்...
ஜீவா சதாசிவம்மாவிலைக் கும்பமில்லை. மங்கல குத்து விளக்குமில்லை. மாறாக கரம் கூப்பி வணக்கம் சொல்ல ஒருவர். கைகளில் கிருமிநாசினி தெளிக்க ஒருவர், வரவேற்கப்படுபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து ஒரு தாளில் குறித்து ஒருவர் தர வந்தவர் அதனை நிரப்பி விழா ஏற்பாட்டாளர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.இதுதான் கலாசாரமா என்று கேட்டவருக்கு 'கொரோனாவுக்கு பின்னான கலாசாரம்' என எளிமையாக பதில் அளித்துவிட்டு வழமைபோலவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார் நூலாசிரியர் மல்லியப்புசந்தி திலகர். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் இல்லாதபோதும் கடைபிடிக்கும் அதே எளிமையும் இன்முகமுமாய் வந்தவர்களையும் வரவேற்றுக்கொண்டு ஒழுங்கமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிக்...