‘கரிகாற்சோழன்’ விருது பெறும் தி.ஞானசேகரனின் 'எரிமலை'
December 12, 2020ஜீவா சதாசிவம்
‘கரிகாற்சோழன்’ விருது பெறும் தி.ஞானசேகரனின் 'எரிமலை' நாவல் ஈழத்து இலக்கிய உலகில் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக இன்றும் இயங்கி வருபவர் டாக்டர். ஞானம் ஞானசேகரன். எழுத்தாளர், பதிப்பாளர், ஆசிரியர் எனும் பண்முக ஆளுமைகொண்ட டாக்டர் ஞானசேரனுக்கு 2018 ஆம் ஆண்டுக்காண ‘கரிகாற்சோழன்’ விருது வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல் நாட்டுக் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாக நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் அளிக்கப்படும் வருடாந்தம் வழங்கப்பட்டு வரும் விருதின் 2018ஆம் ஆண்டுக்கான விருது ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான DR. ஞானசேகரத்தின் எரிமலை நாவலுக்கு வழங்கப்படவுள்ளது.
2018ஆம் ஆண்டிற்கான கரிகாற்சோழன் விருதுத் தேர்வு தொடர்பான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளிவந்த நூல்களுக்கு தனித்தனி விருதுகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் இருந்து 14 நூல்கள் விருதுக்கான போட்டியில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நூல்களை தமிழ்ப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் முதல்வர் கோ.பாலசுப்பிரமணியனால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் நடுவர்களாக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் தமிழ்ப் படைப் பாளருமான சு.பாலசுப்பிர
மணியன்(பாரதிபாலன்),
திருச்சி பிஷப் ஈபர் கல்லூரித் தமிழ்த்துறையின் பேராசியர் முனைவர் ,ரா. விஜயராணி , திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரித் தமிழ்த்துறையின் மேனாள் பேராசிரியர் ப. சுப்பிரமணியன் ஆகியோரும் செயல்பட்டு சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விருதுத்தேர்வு மற்றும் விழா குறித்த ஏற்பாடுகளை அயல்நாட்டுத் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் குறிஞ்சிவேந்தன் மற்றும் துறையின் பேராசிரியர்கள் ,ணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
'எரிமலை' நாவல் பற்றி....
2018,ல் வெளிவந்த சிறந்த நாவலுக்கான கொடகே சாகித்திய
விருதினைப் பெற்றது. ,ந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடகே நிறுவனத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது என்பதும் ,ந்நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவர உள்ள நிலையில் 'கரிகாற் சோழன்' விருதுக்கும் தெரிவாகியுள்ளது.
டாக்டர். ஞானசேகரன்…
சுமார் 20 வருடங்களாக ஞானம் என்றொரு தனித்துவமான இலக்கிய சஞ்சிகையொன்றை இடைவிடாது நடத்தி வருகின்றார். கொரோனா காலத்திலும் அதனை தொடர்ச்சியாக மாதாந்தம் நடத்தி வருபராக இலக்கிய செயற்பாட்டாளராக இருந்துவரும் ஞானசேகரன், பல இளம் எழுத்தாளர்களையும் ஞானத்தில் உருவாக்கியிருக்கின்ற இந்த கூத்தப்படைப்பாளி பற்றி ...
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஞானசேகரன , யாழ். புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, மெதடிஸ்ற் ஆங்கிலப்பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (BA.) பட்டம் பெற்றவர். நீண்டகாலம் வைத்தியராக மலையகத்தில் பணிபுரிந்தவர்.
இலக்கிய உலகிற்கு 60 களில் பிரவேசித்த இவரது முதலாவது முதலாவது சிறுகதை 1964 இல் கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் தனது எழுத்துக்களை வெளிபடுத்தி வந்தவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றை எழுதியுள்ளார். இதழியல், நூல் பதிப்பும் வெளியீடும், இலக்கியச் செயற்பாடுகள் ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார்.
இவரது சிறுகதைத் தொகுதிகளாக காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன் சிறுகதைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.
இவற்றுள் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கலைமாணி (BA.) பட்டப்படிப்புக்கு பாடநூலாக விளங்குகிறது. இவர் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, 'பரதேசி' என்ற மகுடத்தில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து, எரிமலை ஆகியவை ,வரது நாவல்கள். இவற்றுள் புதிய சுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டு நாவல்களும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவை. லயத்துச்சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் மத்திய மாகாண சாகித்திய விருதினைப் பெற்றன. குருதிமலை நாவல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, 'தலெனயகட'- என்ற பெயரில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.
அவுஸ்திரேலிய பயணக்கதை, வட இந்திய பயண அனுபவங்கள், லண்டன் பயண அனுபவங்கள், ஐரோப்பிய பயண இலக்கியம், கனடா பயணம் -ஓர் அனுபவம் ஆகியன இவரது பயணக்கட்டுரைகளை உள்ளடக்கியதான நூல்களாக வெளிவந்துள்ளது. 2000 ஆம் ஆண்டுமுதல், தற்போது 2020 வரை 'ஞானம்' என்ற மாதாந்த கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார். இதுவரை 230 இதழ்கள் வெளிவந்துள்ளன.
ஞானம் சஞ்சிகை உள்நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் முப்பதைந்திற்கும் மேற்பட்ட புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது எனபதும் சுட்டி க்காட்டத்தக்கது.
இச் சஞ்சிகை மூலம் இவர் வெளிக்கொணர்ந்த 600 பக்கங்களில் வெளிவந்த 'ஈழத்துப் போர் இலக்கியம்' மற்றும் 976 பக்கங்களில் வெளிவந்த 'புலம்பெயர் இலக்கியம்' ஆகிய பாரிய தொகுப்புகள் தமிழலக்கியத்திற்கு புதிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்திதோடு வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன.
ஞானம் சஞ்சிகையின் 200ஆவது இதழ் 'ஈழத்துத் தமிழ் நவீன இலக்கிய வெளி' என்ற மகுடத்தில் 1000 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 60 ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல் தொகுதியாக வெளிவந்த இத்தொகுப்பு ஈழத்து தமிழ் இலக்கியத்துடன் தொடர்புபட்ட அதன் கருத்து நிலை. அழகியல் முதலியவை சார்ந்த உரையாடல் தளத்திற்கான இடமாக அமைந்துள்ளது. ஈழத்து இலக்கிய ஆர்வலார்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்
'ஞானம்' பதிப்பகம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் இவர் பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை 60 நூல்கள் இவரது பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன.
ஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் இலக்கிய விழாக்கள், சான்றோர் கௌரவம், நூல்வெளியீடுகள், நினைவு அஞ்சலிகள், இலக்கியப்பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார். சர்வதேச ரீதியாலான எழுத்தாளர்கள் விழாக்கள், மாநாடுகளில் பங்குபற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள அதேவேளை அரங்குகள் பலவற்றுக்கு தலைமை வகித்துள்ளார்.
இலங்கை அரசினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருது உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் ஊடாக முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். இவ்விருதினை பெறும் கலாபூசணம் டாக்டர் ஞானசேகரனை வாழ்த்துகிறது தமிழனின் 'இலக்கிய சங்கமம்’.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் தமிழ் – சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும்
செயற்படும் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ (பாக்யா வெளியீடு) என்னும் நாவலுக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டுக்கான ‘கரிகாற்சோழன் விருது’ வழங்கியமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments