கொரோனா கால அறுவடையாக 'அறிந்திரன்' - ஓர் அறிமுகம்

December 12, 2020

கொரோனா காலத்து அறுவடையாக 'அறிந்திரன்'  யாழில் இருந்து வெளி வருகின்றது. சிறுவர்களுக்கான மாதாந்த சஞ்சிகையாக பல் சுவை அம்சங்களைக் கொண்டதாக இருக்கின்றது. 


அச்சு ஊடகங்களில் நவீன யுகம், கொரோனா யுகம் என்பவை தாக்கத்தை செலுத்தி வருகின்ற நிலையி

ல், சிறுவர்களுக்கென மாதாந்தம் இவ்வாறானதொரு சஞ்சிகையை வெளிக்கொணர எத்தணித்த பொறுப்பாசிரியர் கணபதி சர்வாணந்தா துணிச்சல் மிக்கவர் தான். 

கொரோனா காலத்தையொட்டி பல சிற்றிதழ்கள் மூடுவிழா கண்டு வருகின்ற நிலையில், இக்கால இடைவெளியில் குழந்தைகளின் அறிவுபசிக்கு தீனி போடும் வகையில் 'அறிந்திரன்'  வெளிவந்துள்ளது. 

இந்நெருக்கடியான கால கட்டத்தில்  இவ்வாறானதொரு சஞ்சிகையை வெளியிட எத்தணித்தமைக்கான காரணம் பற்றி பொறுப்பாசிரியரிடம் கேட்டபோது,
 கொரோனா கால விடுமுறையை சிறுபராயத்தினர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு புதுமைகள் நிறைந்த விடயத்தை கொடுத்தால் அவர்களுக்கு இந்த விடுமுறையில் சலிப்புத்தன்மை ஏற்படாது கல்வித்துறையில் இடைவெளி இல்லா ஆர்வத்தில் இருப்பார்கள். இந்த சஞ்சிகையின் மாதிரி ஒன்றை செய்து சிறிய பிள்ளைகளிடம் கொடுத்து அவர்களது விருப்பத்திற்கேற்றவாறே பக்கங்களை ஒழுங்கமைத்தேன். இந்த சஞ்சிகை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தக வடிவிலான சஞ்சிகையாகவே இருக்கின்றது என்றார். 

மொத்தமாக 28 பக்கங்களை கொண்ட 20 ரூபாவிற்கு விற்கப்படும் இந்த சஞ்சிகையில் பொது அறிவுப் புதிர்கள், குட்டிக்கதைகள், வர்ணம் தீட்டும் பகுதிகள், சிந்தனையை கிளறும் வகையில் சிறுவர்களுக்கான போட்டி என பல்சுவையான வியடங்களை சுமந்த வந்துள்ளது. 

நேர்த்தியான பக்க வடிவமைப்பு காத்திரமான விடயங்களை கொண்டு  கைக்கு அடக்கமாக வெளிவந்துள்ள இந்த சஞச்pகை அனைத்து பாடசாலை மாணவர்களும் கையில் வைத்திருப்பது அவசியம்.

மாணவர்களுக்காக தோற்றம் பெற்ற எத்தனையோ சஞ்சிகைகள், சிறுபத்திரிகைகள் வெளிவந்து தற்போது மறைந்திருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு சஞ்சிகை சிறுவர் உலகத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. வாங்கி படியுங்கள். பயன் பெறுங்கள். 

சஞ்சிகை – அறிந்திரன்  
பொறுப்பாசிரியர் - கணபதி சர்வாணந்தா
தொடர்புகளுக்கு – 076-0288853


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images