தலவாக்கலை லோகி தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டுள்ள இளம் கலைஞர் யுவன். 2015 ஆம் ஆண்டு உயர்தர படிப்பை முடித்து பின்பு பலதரப்பட்ட கற்கை நெறிகளை கற்ற இவருக்கு கலைத்துறையிழல் அதீத ஆர்வம். ஆர்வத்தின் விளைவின் சான்றுகளே அவர் தயாரித்துள்ள ஐந்து குறும்படங்கள். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவராகவும் தேசிய இளைஞர் அமைப்பின் உறுப்பினராகவும் ஹட்டன் - கொட்டகலை ரொட்டறிக் கழகத்தின் உறுப்பினராகவும் செயற்படும் யுவனுக்கு விவசாயம் மீது அதீத ஆர்வம். இவரின் சுயதொழில் விவசாயம். 'மூளை; எமது பிரச்சினைகள் சார்ந்தே யோசனை...