எம்.வாமதேவனின் 'குன்றிலிருந்து கோட்டைக்கு' நூல் வெளியீட்டு விழா இன்று

February 20, 2021

 ஒருவர் தனது சுயசரிதத்தை எழுத வேண்டும் என்றால் அதற்கென தனித்துவமான தற்துணிவு இருக்க வேண்டும். துணிந்து தனது சுயசரிதத்தை எழுதி சத்தியசோதனை யாக வெளியிட்டமையினாலேயே மகாத்மா காந்தி இன்றும் போற்றபடுகின்றார். அந்த வகையில் தனது வாழ்வியலை மாத்திரம் அல்லாது அதன் மூலம் தனக்கு பின் உள்ளவர்களுக்கு ஒரு படிப்பினையான அனுபவர்பகிர்வாக கல்வியாளர் எம்.வாமதேவன் வெளியிடவுள்ள 'குன்றிலிருந்து கோட்டைக்கு' எனும் நூல் அமைந்துள்ளது.




 பொதுவாக எழுத்தாளர்களே தம்மை பற்றியதான குறிப்புக்களை வெளியிடுவதாக இருந்து வந்த நிலையில், கல்வியலாளர் இவ்வாறானதொரு தொகுப்பை வெளியிடுவது இது தே முதற்தடைவ என்றும் கொள்ளலாம். இது பற்றி நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சந்திரசேகரன்.

 'எனக்குத்தெரிய தன் வரலாற்றை எழத துணிந்து. அதனைச் செயலாலும் காட்டியவர் நூலாசிரியரே . இதனால் தான் வரலாற்றின் முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமாகச் செல்ல விரும்புகிறேன்.  தான் வரலாறு என்பது ஒருவர் தனது வாழ்க்கை பற்றி முழுமையாக எழுதுவது.  அவரின் வாழ்க்கையானது. அவரது அனுபவங்களினால் எவ்வாறு செம்மைப்படுத்தப்பட்டது. என்பது பற்றி அவரே எழுதுவது.

 இவ்வாறு தனக்கு மட்டுமன்றி மற்றவர்களுடைய மேம்பாட்டுக்கு உதவும் வகையிலேயே வாமதேவன் இத் தன் வரலாற்றைத்தொகுக்கும் பணியிலும் ஈடுபட்டார். எமது பார்வையில் மலையகம் மற்றும் தீவளாவிய ரீதியில் வாழ்கின்ற மூத்த அதிகாரிகள் என்பதோடு. இளமைக் காலம் தொட்டு ஏராளமாக எழுதி வந்தவர். தமிழ் சிறு கதைக்காக பரிசில்களையும் பெற்றவர். அத்துடன் மலையக மக்களின் சமூக பொருளாதார நிலைமைகள் குறித்து தாம் எழுதிய ஆய்வுகளை நூலாக வெளியிட்டவர். இவ்வாறான வாமதேவனின் எழுத்துப்பழக்கம். எல்லா அதிகாரிகளிடமும் இருப்பதில்லை என்பது வேறொறு விடயம். வாமதேவன் தமது ஓய்வு காலத்தில் தமது நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி இந் நூலை எழுதி வெளியிடுவது பெருமகிழ்வைத்  தருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைவரது கைகளிலும் இருக்க வேண்டிய இந்நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறவுள்ளது.

ஹட்டன், ஹைலன்ட்ஸ்  கல்லூரியின் முன்னாள் அதிபரும் மலையக ஆளுமையுமான அமர்ர இர. சிவலிங்கத்தின் 21ஆவது ஞாபகார்த்தப் பேருரையும் இதன்போது இடம்பெறும். பிற்பகல் 3.30 மணிக்கு நூலாசிரியரும், அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழுவின் தலைவருமான எம்.வாமதேவன் தலைமையில் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் பெ. இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்குவதுடன் பேராசிரியர் தை. தனராஜ் பேருரையாளர் அறிமுகத்தினை வழங்குவார்.

 , 'கொவிட்19: மலையக சமுதாயத்தின் மீதான சமூக பொருளாதார விளைவுகள்' எனும் தலைப்பில் , இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளர் எம்.கேசவராஜ்  நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.
இந்த நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து, எம்.வாமதேவன் எழுதிய 'குன்றிலிருந்து கோட்டைக்கு'  நூல் வெளியீடு இடம்பெறும்.

 நூல்வெளியீட்டுரையை மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் தெளிவத்தை  ஜோசப் ஆற்ற, கருத்துரைகளை  பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் வி.சிவஞானசோதி, எழுத்தாளர் எம்.திலகராஜ்,  திருமதி.மாதவகலா ஸ்ரீதரன், சமூக ஆய்வாளர் திருமதி தாஹிர் நூருல் இஸ்ரா ஆகியோர் வழங்க உள்ளனர்.

 , கலாநிதி எஸ்.கருணாகரன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்வு ராஜ் சிவராமனின் நன்றியுரையுடன்  நிறைவுபெறும்.



நன்றி அலசல்

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images