யாருக்காக தகவல் அறியும் சட்டம் - ஜீவா சதாசிவம்

அலசல் June 28, 2017
தகவல் உரிமைச் சட்ட அறிமுகத்தின் பின்னர், இனி எல்லா விடயத்திலும் வெளிப்படைத்தன்மை, நேர்மை இருக்கும் என்று எதிர்பார்ப்பு. எல்லோரது மத்தியிலும் ஒரு நம்பிக்கைத் தன்மை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அதற்கும் தடை போடும் வகையில் முறைகேடுகள் இருக்கின்றமையினால் அதன் நம்பிக்கை நிறைவேற்றப்படுமா? என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது.  தகவல் அறிவதற்கான சட்டமூலம் வந்தது என்பதற்காக 'தகவல் சுதந்திரம்' இந்த நாட்டில் முழுமையாக பேணப்படுமா? என்று நம்பிவிட முடியுமா? ஆம்! இந்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டு இன்றுடன் ஒரு வருடமும் ஐந்து நாட்களும் ஆகிவிட்டன.  இந்த ஒரு...

வெறுப்புமிழும் உரை- ஜீவா சதாசிவம்

அலசல் June 25, 2017
வெறுப்பு பேச்சு / Hate Speech. இந்த பேச்சுக்கள் இந்நாட்டு சிறுபான்மை மக்களிடையே உளவியல் ரீதியில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. இப்பேச்சுக்கு ஹீரோவாக காலம் காலமாக ஒவ்வொருவர் இருந்து வந்திருந்தாலும் சம காலத்தில் சகலரும் அறிந்த Hate Speech ஹீரோவாக விளங்குகிறார் ஞானசார தேரர். 2013ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளராக விளங்கும் ஞானசாரதேரர் கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் தலைதூக்கி பல வெறுப்பான கருத்துக்களை வெளிப்படுத்தி அதன் மூலம் முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பையும்...

குப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம்

அலசல் June 25, 2017
தலைநகர 'குப்பை'யை நீக்க மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிற்கு கால அவகாசம் கொடுத்துள்ள ஜனாதிபதி , 'குப்பை' யை நீக்கத் தவறினால்,  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை வரும் எனவும்  எச்சரித்துள்ளார். இந்த குப்பைப் பிரச்சினை நாட்டின் பல பகுதிகளிலும் பெரியதொரு நெருக்கடியாக மாறியிருக்கிறது.  இது இவ்வாறிருக்க 'குப்பை' பிரச்சினையை முறையாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கையாளவில்லை என்ற அடிப்படையில் இ.தொ.கா. 'மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை'  நிறைவேற்றுவதில் உறுதியான கொள்கை உடையது என்று   'மக்களின் நலன் கருதி'  மேற்படி குழுவின் 'இணைத்தலைமை' (பாராளுமன்ற உறுப்பினர்...

நோர்வூட்டில் மோடி; வரலாற்றை மீட்டிப்பார்த்தல் - ஜீவா சதாசிவம்

June 25, 2017
''நோர்வூட்டில் தனக்கு வரவேற்பளித்த இந்திய வம்சாவளி தமிழ்த் தலைவர்களுக்கு நன்றி'' என இந்திய பிரதமர் மோடி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்துடனான 'ட்வீட்டர்' செய்தி பல இலட்சம் பேரினால் சர்வதேசமெங்கும் பார்வையிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வேறு கட்சியை சார்ந்தவர்களும், ஏனைய மக்களை உள்ளடக்கியதாக பல புகைப்படங்களையும் அவரின் முகப்புத்தகத்தில் பிரசுரிப்பதற்குத் தவறவில்லை. உள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை மீட்டிப்பார்க்கும் ஒரு நகராக,  கடந்த வாரம்  'நோர்வூட்' எனும் நகரம்  விளிக்கப்பட்டது. பாரதப்பிரதமரின் வருகையினால் நகருக்கும் பெருமைதான்!  1970களில் கீனாக்கொலை தொழிலாளர்கள் மீது...

மோடிக்கு ஒரு கடிதம் - ஜீவா சதாசிவம்

அலசல் June 25, 2017
மேன்மை தங்கிய பாரதப் பிரதமருக்கு! ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து சிறப்பிக்க உங்களது  வருகை   பிரதானமாக  அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பௌத்தத்திற் கானதாக உங்களது விஜயம் அமைந்திருந்தாலும் இதன்போது தமிழ் மக்களது விடயம் தொடர்பில் நீங்கள் அவதானத்தை செலுத்தவுள்ளதாகவும் ஊடகங்களின் ஊடாக அவதா னிக்கக் கூடியதாக இருக்கின்றது. இரு மொழி ஊடகங்களும் இரு வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கவும் தவறவில்லை. இப் புனித நிகழ்வுடன் தமிழ் மக்கள் வாழ்விலும் ஒளியேற்றப்படும் என்பதுதான் உங்களது விஜயத்தின் மீதுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் பெரும் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. நல்...

அனர்த்தங்களை தொடரவிடுவதா? - ஜீவா சதாசிவம்

அலசல் June 23, 2017
கடந்த 24 ஆம் திகதி முதல் இன்றுவரை இலங்கையின் தென்பகுதி உட்பட நாட்டின் பலபகுதி மக்களும் பதற்றமான நிலையில். இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி,  பெரும் சீரழிவுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரையில் இது ஒரு புது விடயம் இல்லை. இவ்வாறு  இலட்சக்கணக்கான மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு  வருவது ஒரு வருடாந்த நிகழ்வே! உலக நாடுகளில் இயற்கை அனர்த்தங்களாக வரட்சி, மண்சரிவு , மழை, வெள்ளம், சுனாமி என அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது.  எனினும் அண்மைய ஆண்டுகளில் இலங்கையைப் பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல கட்டாயமாக...

மலையகத்துக்கு தமிழ்நாட்டு ஆசிரியர்கள் எதற்கு? - ஜீவா சதாசிவம்

அலசல் June 22, 2017
மலையக பெருந்தோட்டப்பாடசாலைகளில் விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கு கற்பித்தலுக் கென்று இந்தியாவின்,  தமிழ்நாட்டில்  இருந்து நூறு ஆசிரியர்களைக் கொண்டுவர தீர்மானித்துள்ள விடயம்   பெரும் பிரச்சினையாக பேசப்படுகின்றது. சகல மொழி ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகளும் அறிக்கைகளும் வெளிவரத் தவறவில்லை. இது பற்றி பலமுனை விவாதங்களை இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் அவதானிக்கலாம்.  தலைநகரை மாத்திரம் பிரதானமாகக் கொண்டிருந்த 'பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்' தற்போது ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிவிட்டது.  இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டு ஆசிரியர்களின் தேவை ஏன் திடீரென ஏற்பட்டது என்பது பற்றிய கேள்வி எழுகிறது. அதனையே இவ்வார 'அலசல்'...

மலையக வீடமைப்பு: மேற்கிளம்பும் இனவாதம் - ஜீவா சதாசிவம்

அலசல் June 22, 2017
இனவாதம் தொடர்ச்சியாக தலைவிரித்தாடும் இலங்கையில் அதன் வளர்ச்சிவேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பாரதப்பிரதமரின் இலங்கை விஜயத்தின் பின்னர் எழும் பல இனவாத கருத்துக்கள் இந்நாட்டில் எப்போதும் ஒரு சமாதானத்திற்கான வழி இல்லை என்பதற்கு எச்சரிக்கை விடுப்பதாக  இருக்கின்றது. இதன் வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கையில் தலைவிரித்தாடுகின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பலதரப்பட்ட கருத்துக்கள்  உருவகித்து வெளிப்படுத்தப்படுகின்றன. பாரதப்பிரதமரின் மலையக விஜயத்தின் போது அறிவித்த கருத்துக்கள் கொழும்பு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாயிரம் வீடுகள் உட்பட இதர சில விடயங்களை மலையகத்துக்கு வழங்குவதாக அவரது அறிவித்தலின் பின்னர் பல  இனவாதிகள்...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images