அறிமுகம் தேவைப்படாத ஒரு கலைஞர்... ஒரு காலத்தில் ஒவ்வொரு வீட்டு தொலைக்காட்சியிலும் இவரது முகம் வராத நாட்கள் இருக்காது.... சிறுவனாக வெறும் கேள்விஞானத்தோடு இசைத்துறைக்குள் நுழைந்து 50 வருடங்களுக்கு மேலாக மொழிகளை கடந்து இலங்கை இசை உலகை தனது குரலால் கட்டிப்போட்டு வைத்துள்ள பிரபல மெல்லிசை, திரையிசை பின்னணி பாடகர் முத்தழகு தனது பவள விழாவை எதிர்வரும் 18 ஆம் திகதி கொண்டாடுகின்றார். கலைஞனுக்கு வயது ஏது ...உண்மையில் முத்தழகை பவள விழா காணும் இளைஞன் என்றே கூற வேண்டும்... இலங்கை இசைதுறையில் ஆறு தசாப்த்தங்களை எட்டியுள்ள...
இறுதியுத்தம் முடிந்த பின்னர் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மையின மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்ததாக 2015ஆம் ஆண்டு அமைந்திருந்தது என்று கூறலாம். 2015 இல் ஏற்படுத்தப்பட்ட தேசியஅரசாங்கமே இதற்கு பிரதான காரணம் என்று உறுதியாகக் கூறலாம். 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்துக்கு 08.01.2018 அன்று வயது மூன்றாகிவிட்டது. ஆனால், அரசாங்கம் வயதுக்கு தகுந்த வேலைகளை இங்கு நிறைவேற்றியிருக்கின்றதா? அதன் வலு எப்படி இருக்கின்றது என்பது பற்றியும் சற்று மீட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. 2015ஆண்டுக்கு கொஞ்சம் பின்நோக்கிச் சென்று அப்போதிருந்த அரசியல் சூழல், அதன் மூலம் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்பட்ட...
அரசியல் என்றாலே 'நடிப்பு' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் நடிகர்களும் அரசியலில் தமது ஆதிக்கத்தை கொண்டுள்ளார்கள். தென்னிந்திய அரசியலில் மாத்திரமல்ல, இலங்கை அரசியலிலும் இந்த 'நடிப்பு' அரசியலும் , அரசியலில் 'நடிப்பும்' காலங்காலமாக இருந்து வருகின்றது. தமிழக அரசியலை பொறுத்தவரையில், சினிமா ஸ்டார்களின் அரசியல் ஆதிக்கம் மக்கள் மனதில் தொடர்ச்சியாக இடம்பிடித்து வந்தது. இதன் ஆரம்பம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திலிருந்து ஆரம்பித்து சுமார் மூன்று தசாப்த காலம் தமிழக மக்கள் மனதில் குடிகொண்டிருந்ததை யாரும் மறந்து விட முடியாது. கதாநாயகர்களை முதன்மையாக ஏற்றுக்கொண்ட தமிழக மக்கள் அவ்வாறல்லாதவர்களை...