'ஸ்மார்ட் பார்க்கிங்' கடந்த ஒரு வருடமாக நடைமுறையில் இருந்து வருகின்ற ஒரு சொல். பெரு நகரங்களைப் பொறுத்த வரையில் வாகனத்தரிப்பிட வசதி தலையாய பிரச்சினையாக நாளாந்தம் இருந்து வந்த நிலையில் தற்போது அது பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது. இலங்கையின் சனத்தொகைக்கு ஏற்றவாறு அல்லாது வாகனங்கள் அதிகரித்துள்ளமையினாலேயே வாகனத்தை நிறுத்தும் பிரச்சினை தற்போது அதிகரித்துள்ளது. இதனை கையாள்வதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளின் உபாயத்தை இலங்கையும் கையாள எத்தனித்த முயற்சியின் விளைவு பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கையாள்வதற்கு ஒரு உபாயமாக சிறந்ததொரு முறையாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தன்னியக்கக் கருவிகள் மூலம்...
எழுத்துத் துறையில் நான்கு தசாப்த இலக்கிய ஆளுமை உடனான உரையாடல் : ஜீவா சதாசிவம்
இலக்கியம் July 22, 2018 நான்கு தசாப்த காலமாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு அமைதியான பெண் ஆளுமை 'மண்டூர் அசோகா' என சகலராலும் அறியப்பட்டவர் அசோகாம்பிகை யோகராஜா. மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த இவர், தனது ஆரம்ப கல்வியை மண்டூர் அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலையிலும் உயர்தர கல்வியை மட்டு. பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1977 இல் ஆசிரியர் சேவையில் இணைந்து மண்டூர் மகா வித்தியாலயத்தில் பணி தொடங்கினார். மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர், தனது பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டு.சிவானந்தா வித்தியாலயத்தில் பணியாற்றி 2009...
மத்திய மாகாணத்தில் கண்டியை தளமாகக் கொண்டு தனது எட்டாவது வருடத்தில் கால் பதித்துள்ள Sherin Beauty Academy நிலையத்திற்கும் இன்று (15.07.2018) டிப்ளோமா சான்றிதழ் பெறவந்துள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எனது சிற்றுரையை ஆரம்பிக்கின்றேன். பட்டப்படிப்புகளைவிட எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக பல டிப்ளோமா கற்கை நெறிகள் இருக்கின்றன. அழகுக்கலை உள்ளிட்ட சில டிப்ளோமா படிப்புகள் வேலைவாய்ப்புடன், சுயதொழில் வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவரும் தொழில்களில் அழகுக்கலைக்கு முதலிடம் உண்டு. இலங்கையை பொருத்தமட்டில் அதிகளவான வருமானத்தை ஈட.டி தரம் தொழிற்துறையாக அழகுக்கலைத் துறை இருக்கின்றது. அனைவரும் கல்வியறிவு...
எழுத்தாளர்களான திருமதி இராணி ஸ்ரீதரன், வி.ஜீவகுமாரன், தி.ஞானசேகரம் ஆகியேோருடன் பேராசிரியர் மகேஸ்வரன் (மத்தியில்) யாழ்ப்பாணம், சங்கானையை பிறப்பிடமாகக் கொண்ட புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளரும் டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த கணினிப் பகுதியின் முழுநேரப் பொறுப்பாளரும் டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ்ப் பகுதி பொறுப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற் றுபவருமான வி.ஜீவகுமாரனின் 3 நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரை யாடலும் கடந்த திங்கட்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், "குதிரை வாகனம்", "நிர்வாண மனிதர்கள்", "புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும்" ஆகிய...
இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் தனித்திறமையுடையவர்கள். ஒவ்வொருவரும் தனக்குள் இருக்கும் திறமையை பயன் படுத்தும் வரை அத் திறமை தெரியாமலேயே போய்விடுகின்றது. தன்னைத்தானே நேசிக்கின்ற சகலருமே திறமைசாலிகள். யார் ஒருவர் தன்னை ஏற்றுக்கொள்கிறாரோ மதிக்கிறாரோ உயர்வாக நினைக்கின்றாரோ அவர் கண்டிப்பாக வாழ்வில் வெற்றி பெறுகின்றார் என்கிறார் மனித வள ஆலோசகர் கலாநிதி மு.பாரிவள்ளல். இந்திய, பெங்களூருவைச் சேர்ந்த இவர் சுமார் இரு தசாப்தங்களுக்கு மேல் உலகளாவிய ரீதியில் சர்வதேச தரம் வாய்ந்த பல்வேறு மனவளப் பயிற்சிகளை வழங்கி வருகின்றார். அந்தவகையில், கடந்த பல வருடங்களாக இலங்கையிலும் பலதரப்பட்ட தரப்பினருக்கு மனவளப்...
சுமார் ஏழு தசாப்தகாலமாக இலங்கையின் சிங்கள சினிமாத்துறையில் தனக்கென தனியிடத்தை பிடித்து 'சிங்கள சினிமாவின் தந்தை' என வர்ணிக்கப்பட்டவர்தான் அமரர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ். சிங்கள சினிமாவையே சர்வதேச ரீதியில் எடுத்துச் சென்ற பெருமையும் இவரையே சாரும். இதற்கு சிறந்த உதாரணமாக லெஸ்டரின் தயாரிப்பில் வெளியான அவரது முதலாவது படம் 'ரேகாவ' பிரான்ஸ் திரைப்படவிழாவில் 1957 இல் காண்பிக்கப்பட்டமையைக் கூறலாம். சிங்கள சினிமாவில் இருந்த ஆர்வம் அதனை தரம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முன்னோடி நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதற்கமைய லெஸ்டரின் பின் வந்த பல சிங்கள...