ஸ்மார்ட் பார்க்கிங் பற்றி தெரிந்துகொண்டால் ...- ஜீவா சதாசிவம்

July 23, 2018



'ஸ்மார்ட் பார்க்கிங்' கடந்த ஒரு வருடமாக  நடைமுறையில் இருந்து வருகின்ற ஒரு சொல். பெரு நகரங்களைப் பொறுத்த வரையில் வாகனத்தரிப்பிட வசதி   தலையாய பிரச்சினையாக நாளாந்தம் இருந்து வந்த நிலையில் தற்போது அது பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது.

இலங்கையின் சனத்தொகைக்கு ஏற்றவாறு அல்லாது வாகனங்கள் அதிகரித்துள்ளமையினாலேயே வாகனத்தை நிறுத்தும் பிரச்சினை தற்போது அதிகரித்துள்ளது.

இதனை கையாள்வதற்கு வளர்ச்சியடைந்த நாடுகளின் உபாயத்தை இலங்கையும் கையாள எத்தனித்த முயற்சியின் விளைவு பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கையாள்வதற்கு ஒரு உபாயமாக சிறந்ததொரு முறையாக வளர்ச்சியடைந்த நாடுகளில்   தன்னியக்கக் கருவிகள் மூலம் நிவர்த்திப்பதற்கான வழிமுறையொன்று இருக்கின்றது. இந்நாடுகளில் இந்த "ஸ்மார்ட் பார்க்கிங் "முறை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

அவ்வாறான ஒரு முறைமையினை இலங்கையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நல்லொதொரு எண்ணத்தில்  உருவாக்கி ஆரம்பத்தில்  பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் காலப்போக்கில் பெரும் சிக்கல்களுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலையும் எற்பட்டுவிட்டது. 

"ஸ்மார்ட் பார்க்கிங்" முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் பெரும்பாலான வாகன உரிமையாளர்களையும் சாரதிகளையும் பெரும் சிக்கல் நிலைக்குத் தள்ளிவிட்டது எனலாம். 

வாகனத் தரிப்பிடம் என்னும் போது ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறே பல இடங்களில்  கட்டணங்களை அறிவிட்டு வந்தனர். இந்நிலையில் "ஸ்மார்ட் பார்க்கிங்" என்னும் முறையின் ஊடாக கட்டணம் அறிவிடுவது வரவேற்கத்தக்கதொரு முறையே. 

தன்னியக்க இயந்திரத்தினூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மக்கள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும். ஆனால், இந்த முறையைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாவிடின் மறுபக்கமாக பெருந்தொகைகளையும் இழக்க நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் கடந்த சில மாதங்களாக நடந்த வண்ணமுள்ளன. 

மேல் மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தையும் இங்கு  பதிவு செய்கின்றோம். டுப்ளிகே ஷன் வீதியின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு தனது வேலைகளை முடித்து விட்டு வந்து பார்க்கும் போது வாகனத்தின் முன்பகுதியின் மீது வைக்கப்பட்டிருந்த துண்டொன்றை எடுத் துள்ளார்.  இதனை யார்,  ஏன், தனது வாக னத்தின் மீது வைத்துச்  சென்றிருக்கிறார்கள் என்று அறியாமல் பின்னர் வீடு வந்து ஆராய்ந்துள்ளார். வாகனம் நிறுத்தும் போது அங்கு டிஜிட்டல் இயந்திரம் இருந்ததை அவதானிக்காமல் இருந்தமையினாலேயே இந்த பற்றுசீட்டு தனது வாகனத்தின் மீது இருந்தது என்பது அவருக்குப் புரியவில்லை. 

அதன்பின்னர் பற்றுச்சீட்டிலுள்ள இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி வினவிய போது "நீங்கள் 60 ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போதிய விளக்கத்தை அறிந்து கொள்வதற்கு இதனை மாநகரசபையின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்துள்ளார்.  உரிய இயந்திரம் இருக்குமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பற்றுச்சீட்டை எடுத்து அதற்கான தொகையை அவ்வியந்திரத்தில் இட்டு பற்றுச்சீட்டை எடுக்காது அல்லது கவனிக்காமல் செல்லுமிடத்து அதற்கான தண்டப்பணம் குறிக்கப்பட்ட பற்றுச்சீட்டானது உரியவர்களைத் தேடி வரும்.

இவ்வாறு ஆயிரக்கணக்கான ரூபா தண்டப்பணம்  கோரி பல வீடுகளுக்கு பற்றுச்சீட்டுக்கள் சென்று அதனால் வாகன உரிமையாளர்கள் ஒன்றும் புரியாது தடுமாறி பாதிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்று ள்ளன. 

அவ்வாறு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது பற்றி ஆராய வேண்டிதொரு தேவையும்  இருக்கின்றது.  தன்னியக்க இயந்திர  பாவனை முறையில் சாரதிகளின்  தெளிவின்மையே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.   கொழும்பையொத்த வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில்  இதுபோன்ற வசதிகள் அவசியம். அதனைச் செயற்படுத்தும் போது உரிய முறைமைகள் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டியது பொறுப்புவாய்ந்தவர்களின் அவசியம். . 

பொதுவாக புதிய நல்ல பல திட்டங்களை அரசாங்கமோ அல்லது அது சார்ந்த நிறுவனங்களோ செயற்படுத்தும் போது மக்களுக்கு உரிய விழிப்புணர்வை வழங்கவேண்டியது அரசாங்கத்தினதோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களினதோ கடமை என்பதை மறந்து செயற்படுவதாலேயே இவ்வாறான திட்டங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்படுகின்ற அதேவேளை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது மறைந்தும் விடுகின்றது. 

வானத்தரிப்பிடத்தில் தொழில்புரிபவர்கள்  மாநகர சபைக்குச் சொந்தமானவர்களாயின் பச்சை நிறமான ஆடையையும் தனியார் துறையாயின் செம்மஞ்சள் நிறமான ஆடையையும் அணிந்தே காணப்படுவர். இதில் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டியது அவசியம். 

இவர்கள் சில வேளைகளில் தங்களுக்கு விரும்பிய தொகையை குறிப்பிட்டு பற்றுச்சீட்டை வழங்குவதும் இடம்பெறாமல் இல்லை. இது பற்றி தொடர்ச்சியாக வந்த முறைப்பாடுகளை யடுத்தே இவ்வாறான 'ஸ்மார்ட் பார்க்கிங்' முறைமை அறிமுகப்படுத் தப்பட்டது.

செயற்படுத்தும் முறையும் கட்டண அறவீடுகளும் காலி வீதியின் ஊடாக டுப்ளிகேஷன் வீதி, ெவள்ளவத்தை , கொள்ளுப்பிட்டி,  பம்பலப்பிட்டி, கொழும்பு –7 க்கு உட்பட்ட பல பகுதிகளில் இது அமைக்கப்பட்டுள்ளது.  படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அந்த தன்னியக்க இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பில் படங்களுடன் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விளக்கத்தை வாகனத்தை நிறுத்தும் சகலராலும் புரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. 
டிஜிட்டல் கட்டண முறை

இதன்படி இரு சக்கர வண்டிக்கான கட்டணமாக  ஒரு மணித்தியாலத்திற்கு 10 ரூபாவும்  முச்சக்கர வண்டிக்கு மணித்தியாலத்திற்கு 20 ரூபாவும் வேன், பஸ், லொறி  ஆகியவற்றுக்கு முறையே  ரூ.30 , ரூ.50  என அறிவிடப்படுகின்றது. 
 கட்டணங்கள் சாதாரண அளவாக இருப்பினும்  வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னியக்க இயந்திரத்தினூடாக பற்றுச்சீட்டை எடுக்காவிடின் அதற்காக அறவிடப்படும் தண்டப்பணமே பெரும் சிரமத்தை வாகன சாரதிகள் மத்தியில் உருவாக்கியுள்ளது

உண்மையில் இவ்வாறானதொரு சிக்கல் எற்படுவதற்கு யார் பொறுப்பு என்பது இங்கு சிந்திக்கக் வேண்டிய விடயமாகும். 2016 ஆம் ஆண்டு முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் வாகனங்கள் நிறுத்துவதற்கு "பார்க்கிங் மீற்றர்" முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே 2016 ஆம் ஆண்டு ஒரு புதிய செயற்றிட்டத்துக்கு அமைவாக  Tenaga Car parks (Pvt) Ltd என்னும் நிறுவனத்துக்கு அப் பொறுப்பு கையளிக்கப்பட்டது. இப்போது அந்நிறுவனமே நடத்தி  வருகின்றது.

  தன்னிச்சையாக தண்டப்பணம் அறவிடப்படுகின்றமையால் இதனை அறிந்த  மாநகர  மேயர் ரோஸி சேனநாயக்க கொழும்பு  மாந­கர சபைக்­குட்பட்ட பிர­தே­சத்தில் வாகன தரிப்­புக்­காக தண்­டப்­பணம் அற­வி­டு­வதை உட­ன­டி­யாக தடை­செய்­யு­மாறு ஆணை­யா­ள­ருக்கு கடந்தவாரம் அறிவித்தார்.

கொழும்பு மாந­க­ர­ ச­பை­யால் வெள்­ள­வத்தை, காலி வீதி பிர­தே­சத்தில் வாகன தரிப்புக் கட்­டணம் அற­விட  பொருத்­தப்­ப­ட்­டி­ருக்கும் மீற்றர் மூலம் பொதுமக்­க­ளிடம் பாரிய தண்­டப்­பணம் அற­வி­டப்­ப­டு­வ­தாக எனக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.  குறித்த மீற்­ற­ருக்­கான கட்­ட­ணத்தை உடன் செலுத்தத் தவறும் பட்­சத்தில் அதற்­கான தண்­டப்­பணம் செலுத்­த­வேண்டியேற்­படும் என்­பதை பலரும் அறி­யாமலிருக்­கின்­றனர். அதனால் அதி­க­மா­ன­வர்கள் தண்­டப்­பணம் செலுத்­த­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் தற்போது அறவிடப்படும் அதிக  தண்­டப்­ப­ண­மா­னது பாரிய அநீ­தி­யாகும். இது தொடர்­பாக கவனம் செலுத்­து­மாறு ஆணை­யா­ளரைக் கோரி­யுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


அத்­துடன் வாகனத் தரிப்­புக்­கட்­டணம் செலுத்த தவறும் பட்­­சத்தில் தண்­டப்­பணம் அற­விடும் முறையை உட­ன­டி­யாக தடை­செய்­யு­மாறும் ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு இச் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்கு கொழும்பு மாநகர மேயரை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்த போதும் அது கைகூடவில்லை. எது எவ்வாறாயினும் எந்தவொரு திட்டத்தையும் உரிய நிறுவனங்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மக்களுக்கு உரிய முறையில் தெளிவுப டுத்தினால் இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக் கலாம். 

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images