‘உணவு ஓர் ஆடம்பரப் பொருள் அல்ல’ என்பதை உணர்த்தும் ‘பசித்தவன்’ படக் குழுவினருடன் ஓர் உரையாடல்

January 25, 2021

 ஒரு  நேர  உணவுக்காகவே  உடல் களைக்க  உழைக்கின்றோம்ஆனால்அந்த உணவுக்கு நாம் எந்தளவு மதிப்பு கொடுக்கின்றோம் என்பது தான் எமது எல்லோர் மனதிலும் எழும் கேள்விமாபெரும் விழாக்கள்வைபவங்கள் ஏன் சாதாரண நிகழ்வுகளைக் கூட இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து நடத்துகின்றோம்அதில் விருந்தினர்களை திருப்திப்படுத்துவதற்காக உணவுக்காக  குறைந்தது 75 சதவீதமாவது செலவுகளில்  ஒதுக்கிடுகின்றோம்.

இவ்வாறு ஒதுக்கி மனமாற உணவு சமைத்தாலும் அதனை முழுமையாக உண்ணாமல் ஆசைக்கு ஒரு கோப்பையை  நிரப்பிக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு சென்று அமர்ந்து உண்ணும் போதுஅதனை முழுமையாக உண்கின்றோமாஅதில்வயிற்றுக்கு கால் வாசி குப்பைக்கு முக்கால்வாசி என விரையமாக்கப்படுகிறது என்பது தானே உண்மை.



இப்போதைய காலத்தில் இது பெஷனாகவும் ஆகிவிட்டதுஇவ்வாறு வீசியதன் வலியை கொரோனா காலத்தில் எவரும் உணராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இவையெல்லாம் மனதில் இறுத்தி 'உணவு ஆடம்பரப் பொருள் இல்லைஎன்ற உணர்வில் எழுந்ததே எங்கள் குழுவினரின் 'பசித்தவன்குறுந்திரைப்படம் என்கிறார் இளம் இயக்குநர் வி.டெனிஸலஸ்.

ஒரு வேளை உணவு இல்லாதவர்களுக்கே உணவின் அருமை புரியும் என்பதை மிகவும் தத்ரூபமாக விளக்குவதாக  சுமார் 7-10 நிமிடத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறுந்திரைப்படத்தின் கதைக்களம்ஒளிஒலிகதைக் கருப்பொருள் என்பன அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அட்டனிலிருந்து 10 கி.மீ  தூரத்தில் நோட்டன் வீதியில் அமைந்துள்ள ஒஸ்போன் தோட்டத்தில் உள்ள  இளம் இளைஞர்கள் தோட்ட மக்கள் , பாடசாலை ஆசியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி படப்பிடிப்பை ஆரம்பித்த அதே மாத இறுதியில் நிறைவு செய்துள்ளனர்.

இந்த குறும்படத்தினை My Friends Productions எனும் YouTube தளத்தில் தரவேற்றி படத்தினை கடந்த 6 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதில் துரதிஸ்டவசமான  சம்பவம் ஒன்று இடம்பெற்றதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்இக் குறுந்திரைப்படத்தில் நடித்த 12 வயது இளம் கலைஞன் மாணவனாக பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்த  தோபியா எஸ்கர்;, தனது வீட்டில் இரவு ஆழ்ந்த நித்திரையின் பாம்பு கடிக்குள்ளாகி  இம்மாதத்தின் முதல் வாரத்தில் உயிரிழந்தார்.

இப்பாலகனின் மறைவு செய்தி  பலரது உள்ளங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுதுடன் குறித்த தோட்டத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியதுஇவரின் மறைவுக்குப் பின்னரே 'பசித்தவன்அதிகம் பார்க்கப்பட்டதாகவும் இது பற்றி பேசப்பட்டதாகவும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர்.

ஐந்து கதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கியுள்ள இக்குறும்படத்தில் பிச்சைக்கார கதாப்பாத்திரம் மிகவும் பிரமாதமாகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை இப்படத்திற்கு உயிரோட்டத்தையளித்துள்ளது எனலாம்.

ஆர்.டிலக்சன்.சஜன்.ஜெனிட்டாஆர்.தோபியா எஸ்கர்ஆர்.ஜோன் எஸ்கர்எம்.ராஜ்குமார்பி.கவிஸ்கரன்துசியந்தன் ஆகியோர் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்ஒவ்வொரு கதாப்பாத்திரமும்இப்படத்திற்கு உயிரோட்டமாகவே அமைந்துள்ளது.

இத்திரைப்படத்துக்கு எழுத்துஒளிப்பதிவுஇயக்கம் என அனைத்திற்கும் சொந்தக்காரரான இயக்குனர் வி.டெனிஸ்லஸ்  உடனான உரையாடல் பற்றி இங்கு எமது வாசகர்களுக்காக....

 

இவ்வாறான ஒரு கருப்பொருளை எடுத்ததற்கான காரணம்?

நான் பல திருமண நிகழ்வுகள் உட்பட வேறு பல வைபவங்களுக்குச் சென்றுள்ளேன்அங்கு நான் அவதானித்த பிரதான விடயம் உணவு வீண்விரயம்இதனை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் மனது கணக்கும்இவ்விடயத்தை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும் என்றும் இதன் மூலம் உணவு வீண்விரயத்தை தவிர்க்க கூடியதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இக்கருவை எடுத்தேன்பேச்சை குறைத்து சில செயல்கள் மூலமாகவே இந்த உணர்வை வெளிப்படுத்தினேன்.

இக்குறுந்திரைப்படத்துக்கான கதை களத்தை எவ்வாறு அமைத்துக்கொண்டீர்கள்கதாப்பாத்திரங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் வாழும் எனது ஊரான ஒஸ்போன் தோட்டத்திலேயே இப்படத்தை தயாரித்தேன்அனைத்து கதை களங்களும் இதே இடத்தைச் சேர்ந்ததுஎன்னிடம் படம் எடுப்பதற்காக நல்லதொரு தொலைபேசியோ அல்லது கமராவோ இல்லைஎமது ஊரைச் சேர்ந்த நண்பர் எஸ்.செல்வகுமார்தம்பி பெனடிக்ட் ஆகியோர் கெமரா உதவியை வழங்கினார்கள்.

அந்த உதவியினூடாக தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளை தரவிறக்கி முடியுமானவரை தரமாக இப்படம் அமைய வேண்டும் என்பதற்கு அமைவாகவே முயற்சித்தேன்எவ்வித பயிற்சியும் இல்லாமல் எம்மிடம் இருந்த சிறிய அளவிலான வளங்களை கொண்டு படைத்த படைப்பே இது.

மேலே குறிப்பிட்டுள்ள எனது நண்பர்கள் கதாப்பாத்திரங்களை ஏற்றுக்கொண்டார்கள்அதில் மாணவனாக எமது ஊரைச் சேர்ந்த எஸ்கர் எனும் 12 வயதுடைய சிறுவனே பிரதான கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்.  சிறப்பாக நடித்த எஸ்கர் இன்று எம்முடன் இல்லை என்பதே வேதனைக்குறிய விடயம்எமது குழுமம் அவனது இழப்பினால் பெரும் வருத்ததத்தில் உள்ளோம்படத்தை செம்மையாக்கி முழுமையாக பார்த்த போது நானாஇப்படி நடித்துள்ளேன என்பதை பார்த்து எஸ்கர் வியந்தான்மிகத் திறமையான எஸ்கரை இளம் கலைஞனாக நாம் அறிமுகப்படுத்தினோம்எதிர்காலத்தில் சிறந்த கலைஞனாக உருவாகுவான் எனவும் எதிர்ப்பார்த்தோன்ஆனால்அவனுக்கு என்ன அவசரமோ எம்மை விட்டு பிரிந்துவிட்டான்.

 பிச்சைக்கார கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக அமைத்துள்ளீர்கள்அது எவ்வாறு ?

இந்த கதாப்பாத்திரத்தை எனது நண்பர் ஆர்.டிலக்ஷன் விரும்பியே ஏற்றுக்கொண்டார்அந்த பாத்திரத்திற்கான ஒப்பனையை ஜெனிட்டா செய்து விட்டார்சுமாராக நடிக்காமல் டிலக்ஷன் தன்னையே உண்மையான கதாப்பாத்திரமாக உருவாக்கிக்கொண்டவர்எனக்கே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததுஅந்த கதாப்பாத்திரம் காட்சிப்படுத்தப்படும் குப்பை கூலம் எமது ஊரில் உள்ள ஒன்றுஅருகே செல்ல முடியாதளவிற்கு துர்நாற்றம்இருப்பினும் அதனையும் பொருட்படுத்தாது அதில் களமிறங்கியது எனக்கு ஆச்சரியத்தையே தந்ததுஅதேபோல தாய்ஆசிரியர்மாணவன் உட்பட சகல கதாப்பத்திரங்களின் நடிப்பு படத்தை தொகுத்தப்பின்னர் வியக்கத்தக்கதாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

 இது உங்களது முதலாவது படைப்பாஇத்துறையில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது.

இது எனது 3ஆவது படைப்புகடந்த எட்டு வருடங்களாக அட்டன் திருச்சிலுவை ஆலய வருடாந்த ஒளிவிழாவிற்கு எமது தோட்ட ஒஸ்போன் மாணவர்களால் மேடை நாடகம் அரங்கேறியுள்ளதுஅதனூடாக எமது ஒஸ்போன் பகுதி மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சிகளை வழங்கியுள்ளேன்அதனூடாகவே ஆர்வம் ஏற்பட்டதுஅதன் பின்னரே 'என் இதயம் யேசுவிற்கு தெரியும்' , 'விசுவாசிஆகிய இரு குறுந்திரைப்டங்களினூடாக எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்

இயக்குனரும் ஆசிரியருமான தயாநிதிபாபு வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே சமூகம் சார்ந்த படைப்புக்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கிய போது இந்த படைப்பை உருவாக்கினோம்.

இப்படத்திற்கு  உதவியவர்களுக்கு நீங்கள் கூறவிரும்புவது?

வி.பெனடிக்எஸ்.ஜோதிநாதன்பேரின்பநாயகம்கலைவாணன் (ஆசிரியர்சதீஸ் ஆகியோர் பெரும் உதவிகளை வழங்கினார்கள் என்பதை இங்கு நினைவு படுத்துகின்றேன்பாடசாலையில் அனுமதி வழங்கிய ஆசிரியர்களான வீரதுரை , நிக்சன் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள.;

எதிர்;காலத்தில் மேலும் பல சிறந்த சமூகம் சார்ந்த படைப்புக்களை உருவாக்குவதற்கு எத்தணித்துள்ளோம்உங்களின் ஆதரவு ஆசீர்வாதம் இருந்தார் பல படைப்புக்களை தயாரிக்கலாம்.

முன்னேற துடிக்கும் இந்த இந்த இளம் கலைஞர்களை வாழ்த்துவோம்.

 Nandri Thamilan 'ilakkiya sangamam'

 24/01/2021

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images