காலமாற்றத்திற்கேற்ப பயணிப்பது அவசியம் - ஜீவா சதாசிவம்

நேர்காணல் July 29, 2017
நிகழ்ச்சிப் பணிப்பாளர் ,சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் உடனான ஓரு சந்திப்பு அம்மாவின் முழுமையான ஆதரவுடன் இத்துறைக்குள் நுழைந்தேன். அதேபோல மனைவியும் எனக்கு இத்துறையில் நான் தொடர்ந்து பயணிப்பதற்கு ஆதரவாக இருக்கின்றார். அதனால் இலகுவாக பயணிக்க கூடியதாக இருக்கின்றது. இத்துறைதான் எனது இலட்சியம் என நான் கூறவில்லை.  வந்த  பிறகு  இத்துறையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். இத்துறைக்குள் பிரவேசித்த பின்னர் துறைசார் விடயங்களை தொடர்ச்சியாக கற்று காலத்திற்கேற்ப என்னை நான் வளர்த்துக்கொண்டேன். என் அப்பாவின் அனுமதியுடன் மூத்த அறிவிப்பாளர் எழில் அண்ணா சக்தி வானொலியில் சிறுவர்...

உள்ளூராட்சிக்குள் உள்வாங்கப்படாத மலையகம் - ஜீவா சதாசிவம்

அலசல் July 28, 2017
என்னதான் நீண்டகால வரலாற்றை கொண்டவர்களாக மலையக மக்கள் இருந்தாலும் இன்று வரை முழுமையாக தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். சாதாரண அடிப்படை வசதிகள் சிலவற்றை பெற்றுக்கொடுக்கும்   உள்ளூராட்சி சபைகளே உறுதியாக மலையகத்தில் இல்லாத நிலையில் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் உள்வாங்கப்படுவதென்பது  இன்னும் முழுமையாக சாத்தியமாகவில்லை என்பதை புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கின்றது.    இந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் அதன் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலும்  கடந்த ஐந்து வருடங்களாக பல தரப்பிலும் விதந்துரைப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அது பற்றி முழுமையான முடிவு இல்லை என்பது வருந்தக்கூடிய...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: கலப்பு முறையா? குழப்ப முறையா? - ஜீவா சதாசிவம்

அலசல் July 22, 2017
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறி நிலையில் கிடந்த இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வருட இறுதியில் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் பற்றி இந்த வார செய்திகள் அரசியல் களத்தில் வெளியாகியுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனும் தன் பங்குக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கலப்பு முறையில் நடக்கவுள்ளதாகவும் அது சிறுகட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் அறிக்கை விட்டுள்ளார். இந்த கலப்பு முறை என்றால் என்ன என்ற 'குழப்பம்' இவ்வளவு...

நல்லாட்சியின் கையை முறிக்கும் எதிரணி - ஜீவா சதாசிவம்

அலசல் July 14, 2017
ஆகஸ்டில் மூன்றாவது வயதை எட்டுகிறது 'நல்லாட்சி'. பெயர் நல்லாட்சி என்று இருக்கின்ற போதும், ஆட்சியை கைப்பற்றிய நாளிலிருந்து இன்று வரை  கிரக பலன்கள் அவ்வளவு சரியில்லைபோலும், நாளாந்தம்  பிரச்சினைகள். போராட்டங்கள்,  எதிர்ப்புகள் என ஏகப்பட்ட  தொல்லைகள்  நல்லாட்சியை நம்பிய  மக்களையும் எரிச்சலடையச் செய்துள்ளன. 'ராஜபக் ஷ'க்களின் ஆட்சியில் அதிருப்தியில் இருந்த மக்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு 'மைத்திரி' க்கு புள்ளடியிட்டனர்.  அப்போது அவர் கட்சி சாராத பொதுவேட்பாளர்.  அவ்வாறே இருப்பார் என்றும் மக்களும் எதிர்பார்த்தனர். தவிர்க்க முடியாத  நிலைமை  கட்சிக்கும் தலைவனாக  இருக்க வேண்டிய இக்கட்டான நிலை மைத்திரிக்கு. இந்நிலையில்...

'உமா' எதிர்ப்புக்கு மைத்ரி ஆதரவு அரசியலா? சமூக நலனா?- ஜீவா சதாசிவம்

அலசல் July 08, 2017
கடந்த பல மாதங்களாக இலங்கையில் தொடர் ஆர்ப்பாட்டங்கள். எவ்விடயமாயினும் அதனை சாதிப்பதற்கோ அல்லது தங்களது எதிர்ப்புக்களை  வெளிப்படுத்துவதற்கோ 'எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்' அவ்வப்போது இடம்பெறுகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் அரசாங்கத்தினால் முழுமையான பதிலை தரக்கூடியதாக இருக்கின்றதா? என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். நாட்டில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றபோதிலும் இன, மத, மொழி, அரசியல் பேதங்கள் கடந்த நிலையில் இடம்பெற்ற 'பண்டாரவளை மக்கள் எதிர்ப்பு போராட்டம்' கவனத்தில் கொள்ளத்தக்கது.  நாட்டில் பரவலாக இடம்பெறும் போராட்டங்களை அரசாங்கம் தனது பாதுகாப்பு பிரிவினரைக் கொண்டோ, நீதிமன்ற முன் அனுமதியுடனோ தடுக்க முற்படுகின்ற சந்தர்ப்பத்தில்...

இலக்கியம்: எழுத்தும் செயற்பாடும் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் July 02, 2017
இலக்கியத்தில் தொடர்ச்சியாக இருப்பவர்கள் பலர். அதில் சிலரே தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இவ்வாறிருப்பது மிக முக்கியமான அம்சம். அந்தவகையில் இலக்கிய உலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக்கொண்டவர் 'மல்லிகை ஜீவா' என பலராலும் அழைக்கப்படும் டொமினிக் ஜீவா. இது அவரது 90ஆவது பிறந்ததினத்தில் அறிந்துகொள்ளக்கூடியதாகஇருந்தது. ஒரு இலக்கியவாதியுடன் ஒரு மாலைப் பொழுதை கழிக்கும் மனநிலையுடன் எத்தனை பேர் இருக்கின்றனர். அவ்வாறிருப்பது பெரியதொரு விடயம் தான். எந்தளவிற்கு அவர் பங்களிப்புச் செய்திருக்கின்றார் என்பதும் முக்கியமானதொரு விடயம். இலக்கியவாதிகள்எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆனால்இ இவ்வாறானதொரு கௌரவிப்பு எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது. கிடைக்கின்றது என்பது...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images