தெரிவு செய்யப்பட்ட நாவல்கள்.... இலங்கையில் இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கின்ற பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம் 4ஆவது தடவையாக நடத்தவுள்ள பெயார்வே–2018 தேசிய இலக்கிய விருது விழா எதிர்வரும் ஆண்டு நடத்தப்படவுள்ள நிலையில் அவ்விழாவில் விருதுகளைப் பெறுவதற்கு மும்மொழியிலும் தெரிவுசெய்யப்பட்ட விருதாளர்களின் பெயர்ப்பட்டியலானது கடந்தவாரம் கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது. "மும்மொழிகளிலும் தெரிவுசெய்யப்பட்ட நாவல்களுக்கே பணப்பரிசில்களும் விருதும் வழங்கப்படும். ஒவ்வொரு மொழியிலும் முதலாவது இடத்துக்குத் தெரிவு செய்யப்படும் தலைசிறந்த நாவலுக்கு 5 இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து குறும்பட்டியலுக்குத்...
இந்திய பேச்சாளர் (Motivation Speaker) பரமன் பச்சைமுத்துவின் 'உறவுகளில் உன்னதம்' என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நாளை 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் பம்பலப்பிட்டி லோறன்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற வுள்ளது. நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஏற்பாட்டில், கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் உயர்தரம் பயிலும் மாணவ, மாணவியருக்கும் கொழும்பில் தொழில் புரியும் இளைஞர், யுவதிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இச்சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக இந்நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் 'உறவுகளின் உன்னதம்' உட்பட பலதரப்பட்ட...
இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சிகளோடு மேலெழுந்த அச்சு ஊடகமே வீரகேசரி - ஜீவா சதாசிவம்
இலக்கியம் September 10, 2018 இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சிகளோடு மேலெழுந்த அச்சு ஊடகமே வீரகேசரி. இந்திய விடுதலை இயக்கம், இலங்கைத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம், காலனித்துவச் சூழலில் விசை கொண்ட தமிழ் மறுமலர்ச்சி ஆகியவற்றோடு தோற்றம் பெற்ற இதழ்களுள் வீரகேசரி முக்கியமானது. “எங்கள் பத்திரிகை” என்று கூறும் மரபு தமிழ்ச் சூழலிலே வளர்ச்சியடைந்தது. “எங்கள் பத்திரிகை” “எங்கடை பேப்பர்” முதலாம் சொல்லாடல்களே வீரகேசரி தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பைக் குறியீட்டுப்படுத்தும் என்கிறார் பேராசிரியர் சபா ஜெயராசா. வீரகேசரி பத்திரிகை 89ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு...
வாரிசு அரசியல் உலகில் புதிதாக உருவானதொன்றல்ல. மேலைத்தேய நாடுகள் உட்பட வளர்ந்துவரும் நாடுகளிலும் வாரிசு அரசியல் பல நூற்றாண்டுக் கணக்கில் இருந்தே வருகின்றது. ஆக, ஆச்சரியமான விடயமாக இல்லாதபோதிலும் கடந்த வாரம் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக பேசுபொருளான விடயமாக "வாரிசு அரசியல்" இருந்தது. அதனை பற்றியே இவ்வார அலசலும் பேசுகின்றது. உலக அரசியலை எடுத்துக்கொண்டால், உலகளாவிய ரீதியில் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும் தான் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் காலத்தில் தன்னுடைய வாரிசுகளில் ஒருவரே இதனைத் தொடர்ச்சியாக கொண்டு செல்வதான கட்டமைப்பை உருவாக்கிகொள்கின்றார். தலைவர்களைத் தெரிவு செய்வது மக்களாக இருந்தாலும்...
நடனத்துறையில் மூன்று தசாப்தத்தை கடந்துள்ள ''கலைச்செல்வி ' நிர்மலா ஜோன்' - ஜீவா சதாசிவம்
இலக்கியம் September 01, 2018 3 தசாப்தத்தைக் கடந்து ஒரு நிர்மலாஞ்சலி நாட்டிய பள்ளியை நடத்திவரும் நீங்கள் இதுவரையில் எதிர்கொண்ட சவால்கள் எவ்வாறானது என்பது பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? பல சவால்கள் இன்னல்கள் என்று அனுபவித்துள்ளேன். ஆனால் என்னுடைய தணியாத தாகம், - விடாமுயற்சி – நாட்டியத்தின்மேல் உள்ள பிரியம், - என்னுள் இருக்கும் இனம்புரியாத சக்தி இவையெல்லாம் சேர்ந்து எதுநேர்ந்தாலும் முகம்கொடுத்து மன சக்தியுடன் எனது நடனப் பயணத்தை தொடர ஒருவிதத்தில் இந்த சவால்கள் என்னை நடனத்துறையில் முன்னோக்கிச் செல்ல வழியமைப்பதாகவே அமைகின்றது என்றுகூட சொல்லலாம். இதுவரையில் பல வகையான நாட்டிய...