இலங்கை அரசியலில் நடப்பு காலம் என்பது ஒரு ஸ்திரமற்ற போக்கையே காட்டி நிற்கின்றது. இந்த ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் ஒரு காரணமாயினும் இத்தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைவதற்கு ஏதுவான காரணிகள் என்னவென்றும் இந்த வார 'அலசல்' ஆராய்கிறது. ஜனநாயக ஆட்சிக்கட்டமைப்பில் 'கட்சிகள்' என்பது மிக முக்கியமான அம்சம். நாட்டை ஆட்சி செய்வதற்காக அல்லது தமது சமூகத்தின் விருத்திக்கான கொள்கை பிரகடனங்களை செய்து அத்தகைய கொள்கை பிரகடனங்களின் அடிப்படையில் மக்களை அணி திரட்டி, அந்த அமைப்புக்கு ஒரு யாப்பினை உருவாக்கி அந்த யாப்பின் அடிப்படையில் அங்கத்தவர்களை...
நீண்டகாலமாக இழுபறிநிலையில் இருந்த உள்ளூராட்சி தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தல் முடிவுகளின் பின்னர் நிர்வாகம் உட்பட பலதரப்பட்ட அதிகாரங்களில் மாற்றங்கள் வரும் என்று பலராலும் பேசப்பட்டுக்கொண்டிருப்பதை முடிவுகள் வெளியான தருணத்திலிருந்து கேட்கக் கூடியதாக இருக்கின்றது. ஆம்! நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பெருவாரியாக வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாம் இடத்தையும் ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றை இணைத்து ப்பார்க்கும்போது மூன்றாமிடத்தையும் மக்கள் விடுதலை முன்னணி நான்காம் இடத்தையும்...
'அலசல்' ஒரு அரசியல் பத்தி. சமகால அரசியல் விடயங்கள் தொடர்பான ஒரு பதிவு பார்வை என்று சொல்லலாம். ஆனாலும், தவிர்க்கமுடியாத வகையில் கடந்த மூன்று வாரங்களாக தொடர் கட்டுரைபோன்று தொடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக எழுதிய 'அடுத்த ஜனாதிபதி யார்?', 'சின்னங்களும் எண்ணங்களும் ஆகிய தலைப்புக்களில் எழுதியவற்றின் தொடர்ச்சியாகவே இந்தவாரமும் எழுதவேண்டியிருக்கிறது. கடந்த வாரம் பேசிய சின்னங்களும் எண்ணங்களும் மக்களின் எண்ணங்களை மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணங்களையும் கூட எடுத்துச் சொல்லிவிட்டது. அன்று அலசல் சொன்னதுபோல மொட்டு மலருமா? கைதாங்குமா? என்ற வினாவுக்கு விடையாக...
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலங்களில் பல மேடைகளில் பேசப்பட்ட சில பிரசார வசனங்கள் இப்படி அமைகின்றன. 'எண்ணங்கள் எதுவானாலும் சின்னங்களே முக்கியம்', 'எண்ணம் வேறாகலாம் சின்னம் ஒன்றாகட்டும்',' 'சின்னங்கள் வேறாகலாம் எண்ணங்களே முக்கியம்' 'வண்ணங்கள் மாறலாம். சின்னங்கள் மாறலாம். எண்ணங்கள் மாறக்கூடாது' இது போன்ற எல்லா கோஷங்களிலும் உள்ளர்த்தமாக அமைவது தாம் 'இந்த முறை' போட்டியிடும் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்பது தான். கட்சிகளுக்கு சின்னங்கள் உள்ள போதும் அவற்றில் இருந்து எவ்வாறு ஏன் மாறுகிறார்கள், இந்த 'சின்ன' மாறல்கள் ஊடாக வெளிப்படும் 'எண்ண' மாறல்கள் என்ன என்பதை...
இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது உள்ளூராட்சி மன்றத் தேர்தல். இந்தத் தேர்தலில் பிரதேச சபைத் தலைவரையோ, மாநகரசபைத் தலைவரையோ, மாநகர சபை மேயரையோ தான் தெரிவு செய்யலாம். ஆனால், இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார மேடைகளில் அடுத்த ஜனாதிபதி யார் என்றே அரசியல்வாதிகள் பேசி முடிக்கின்றனர். இந்நாள் ஜனாதிபதி இதுதான் நான் போட்டியிடுகின்ற கடைசி தேர்தல் என்று கூறிக்கொண்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இப்போது தனது பதவிக்காலம் எத்தனை வருடங்கள் என சட்ட ஆலோசனை பெற்றார். அது ஐந்தாண்டுகள் என அறிவிக்கப்படடதும் அடுத்த...