நான்கு நாவல்களுக்கு FAIRWAY விருது - ஜீவா சதாசிவம்

March 22, 2018


இலங்கையில் இலக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கின்ற பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனம் மூன்றாவது வருடமாக நடத்திய 'காலி இலக்கிய விருது விழா'  கடந்த மாதம் 26 ஆம் திகதி காலியில் நடைபெற்றது.  

அன்றைய தினம் மாலை 7 மணிமுதல் 8.30 மணிவரை இவ்விழா இடம்பெற்றது. நேர ஒழுங்கமைப்பிற்கேற்ப சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மங்கள சமர வீர நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

இவ்விருதுக்கு நடுவர்களால் மூன்று மொழிகளிலும் 13 நாவல்கள் தெரிவுசெய்யப்பட்டன. இதற்கமைய தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே நான்கு நூல்களும் சிங்களத்தில் ஐந்து நூல்களும் தெரிவு செய்யப்பட்டது.  இலங்கையில்  தமிழ்,  சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான சிறந்த நாவல்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த  நாவல்களுக்கு அதிசிறந்த, சிறந்த நாவல்களுக்கு விருதுகள், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

நாவலாசிரியர்-களை மையப்படுத்தியதாகவே இவ்விருது விழா இடம்பெறும்.
அந்தவகையில்  இவ்வருட  விழாவில்,  தமிழ் மொழி மூல  சிறந்த நாவலுக்கான விருதை ஈழத்தின் மூத்த எழுத்-தாளர் தெணியான் எழுதிய 'ஏதனம்' எனும் நாவல் விருதுடன் ஐந்து இலட்சம் ரூபா பணப்பரிசையும் 
பெற்றுக்கொண்டது.

தெணியான் உடல் நலக் குறைவால் இந்நிகழ்வுக்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கான விருதை அவரது உறவினரான எழுத்தாளர் வதிரி சீ. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். ஏதனம் எனும் நாவலை  பதிப்பித்த பூபால சிங்கம் புத்தகசாலை அதிபர் ஸ்ரீதர் சிங்கும் விருது வழங்கி இதன்போது கௌரவிக்கப்பட்டார்.

மேலும் மா. பாலசிங்கத்தின் 'தழும்பு', சி. வஹாப்டீனின் 'குலைமுறிசல்'  யோகேந்திரநாதனின் 'நீந்திக்கடந்த நெருப்-பாறு' ஆகிய தமிழ் நாவல்கள் விருதையும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது. 
இம்முறைபோட்டியில்தமிழ்நாவலைதேர்வுசெய்வதற்கானநடுவர்களாக பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ்த் துறை  பேராசிரியர். வ.மகேஸ்வரன், ஆங்கிலத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுமதி சிவமோகன், தத்துவத்துறை முன்னாள் பேராசிரியரான, கலாநிதிஎம்.எஸ்.எம்.அனஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.  

தமிழ்மொழிமூல நாவல் விருதுக்கான சிறந்த நாவல் தெரிவுக்காக மொத்தம் எட்டு நாவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.  இதில் நான்கு நாவல்களே விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன. 

ஆங்கில மொழி மூலத்தில் அதி சிறந்த நாவலுக்கான  விருதையும் ஐந்து இலட்சம் ரூபா பணப்பரிசையும் அமந்த ஜெய்யின்  ‘The Other One’  எனும் நாவல் பெற்றுக்கொண்டது.  ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசையும் விருதையும் ருக்-மணி சமரநாயக்கவின் 'Dutugemunu: Prince of Destiny’ , சங்கரிக்க சந்திரனின் ‘Song of the Sun God’,  மரியோ பெரேராவின்  'Wrath of Kali: The dark side of God , ஆகிய நாவல்கள் பெற்றுக்கொண்டன. 

சிங்கள மொழியில் அனுரசிறி ஹெட்டிகேயின் 'Pandaka Puthra Wasthuwa’  எனும் நாவல் ஐந்து இலட்சம்  ரூபா பணப்ப-ரிசையும் விருதையும் பெற்றுக்கொண்டது. ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசை  நிசங்க விஜயமன்னவின் Handha Paluwa Thani Tharuwa’ , விமல் உதய ஹப்புகொட ஆராய்ச்சியன் ‘Yakada Silpara’ , கீர்த்தி வெளிசரகேயன் 'Garunda Muhurthaya’ , தீப்தி மங்கல ராஜபக்ஷவின் 'Nikini Kaluwara’ ஆகிய நாவல்கள் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மங்கள சமர வீர உரையாற்றுகையில், இலங்கையில் உள்ள மும் மொழி எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான விருது விழாவை செய்வது வரவேற்கப்பட வேண்டிய விடயம். இலக்கியத்துக்கு புகழ் பெற்ற  இடமாக விளங்கும் காலியில் இந்நிகழ்வை நடத்துவது சிறப்பானதாகும். இந்நி-கழ்வில்,  விருதுபெறும் அனைவரையும் மனமார வாழ்த்துகின்றேன் என குறிப்பிட்டார். 

ஊடகங்கள் இவ்விருது விழா பற்றியதான விடயங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இவ்விழாவின் போது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. உண்மையில் மும் மொழியிலான ஊடகங்களுக்கும் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிக்க வேண்டிய கடமை ஏற்பாட்டாளர்களைச் சார்ந்தது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

ரஞ்சனி ஒபேசேகர - ஆங்கிலம், பேராசிரியர் வி.மகேஸ்வரன் -தமிழ்,  பிரபா மனுரட்ன -சிங்களம் ஆகியோர் தெரிவு செய்-யப்பட்ட முதல் பரிசுக்குரிய நூல் பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியதான உரையையும் நிகழ்த்தியிருந்தனர். 
ஆங்கில, சிங்கள மொழியில் விருது பெற்றுக்கொண்டவர்களில் இளம் தலைமுறையினரும் அடங்குகின்றனர். ஆனால், தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இளம் தலைமுறையினரை நாவலாசிரியர்களாக காணக்கிடைக்காமை வருத்தத்திற்குரிய விடயமாகும். 

இலங்கையில் தமிழ்மொழி மூல நாவலாசிரியர்கள் இருந்தாலும் அவர்களது படைப்புக்கள் இவ்வாறான விருதுகளுக்கு உள்வாங்கப்படாதது வருந்தத்தக்கதொரு விடயமாகும். இதுவே ஏற்பாட்டாளர்களின் கருத்தாகவும் இருந்தது. எதிர்வரும் காலங்க ளில் இவ்வாறானதொரு நிலைமையில் மாற்றத்தைக் காணக் கூடியதாக இருக்கும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். 


ஜீவா சதாசிவம் 
படப்பிடிப்பு : உதேஷ் You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images