குணபதி கந்தசாமியின் 'இதுகாலம்' ஜீவா சதாசிவம்
March 26, 2018
யாழ். மானிப்பாயைச் சேர்ந்தவரும் தற்போது சுவிஸில் புலம் பெயர்ந்து வசித்துவருபவருமான கலைஞர் குணபதி கந்தசாமியின் இயக்கத்தில் உருவான 'இதுகாலம்' எனும் முழு நீள தமிழ்த்திரைப்படம் நேற்று நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 15 திரையரங்குகளில் வெளியானது.
இலங்கையைச் சேர்ந்த குணபதி கந்தசாமி 1983 ஆம் ஆண்டளவில் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் தற்போது வசித்து வருகின்றார். இலங்கையில் தயாரிக்கப்பட்டு மிகவும் பிரசித்திபெற்ற தமிழ்த்திரைப்படமான செங்கையாழியானின் தயாரிப்பில் உருவான 'வாடைக்காற்று' திரைப்படத்தின்மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் இலங்கை தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமான கலைஞர் இவர். அதன் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தொடர் நாடகங்கள், திரைப்படங்களில் வெவ்வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஒரு சிறந்த கலைஞராவார்.
இளம் வயதில் தனக்கு இருந்த நடிப்புத்துறை மீதான ஆர்வமே 'இதுகாலம்'எனும் முழுநீளத் தமிழ் திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறும் இவர் அந்த படத்தை பற்றி இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார். இது இவரது முதலாவது திரைப்பட முயற்சியும்கூட...
சுமார் பதினான்கு கலைஞர்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சுவிஸில் எடுக்கப்பட்டதாகும். ஒன்றரை மணித்தி யாலத்தை கொண்டுள்ள இத்திரைப்படம் காதல் கதையை மையமாகக்கொண்டு சற்று வித்தியாச மாகவே அதாவது சமூகத்துக்கு நல்லதொரு கருத்தை கொடுக்குமளவுக்கு தயாரிக்கப் பட்டுள்ளது.
சுவிஸில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் எல்லோ ருக்கும் பொருந்தும் பொதுவான கதைக்களமாக காதலுக்கு மரியாதை செலுத்துவதாகவே இந்த கதை அமைந்துள்ளது. இளம் தலை முறை யினரை நல்வழிப்படுத்துவதாகவே இது அமைந்திருக்கின்றது.
இலங்கை கலைஞர்களைக் கொண்டே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தவர்கள் சேர்ந்து பார்க்கக்கூடியதாகவே அமைந்துள்ளது என்றார்.
எஸ்.ஜீவா (24.03.2018)
1 comments
யாழில் நேற்று முழுக்க பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
ReplyDelete