வௌ்ளிவிழாக் காணும் சைவ மங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்கம்

June 22, 2018


வௌ்ளவத்தை சைவ மங்கையர்  வித்தியாலய பழைய மாணவர்  சங்கம் தனது வெள்ளிவிழா ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ள இத்தருணத்தில் தனது ஆண்டு விழாவை எதிர்வரும் 16ஆம் திகதி சினமன் லேக்சைட் ஹோட்டலில் மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.  1993ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் தொடர் ஒரே குழுமத்துடன் இயங்கி இற்றைவரை காலமும் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை நோக்கி ஒவ்வொரு கட்டத்தையும் முன்னெடுத்தச் செல்கின்றது. அந்தவகையில் சங்கத்தின் கடந்த காலத்தை மீட்டிப்பார்ப்பதாக இக்கட்டுரை அமையும். 

  1982ஆம் ஆண்டு  செயற்பட்டுக் கொண்டிருந்த  பழைய மாணவர் சங்கமானது ஏறத்தாழ 13 ஆண்டுகளின் பின் தனது செயற்பாடுகளை மீள ஆரம்பித்தது. நாட்டின் அசாதாரண சூழ்நிலைக்கரணமாக  1957 ஆண்டு முதல்  1982 ஆண்டுவரையான  காலப்பகுதியில் மேற்படி சங்கத்தின்  நடவடிக்கைகள் தடைப்பட்ட்டிருந்தது.  

முன்னாள் அதிபர்களான அமரர் தேசபந்து நாகம்மாள், செல்வி காசிப்பிள்ளை (1934 - 1969) அமரர் செல்வி மனோரஞ்சிதம் ஆறுமுகம் (1975 - 1991) , இலங்கை கடல் கடந்த சேவையின் சமூக நல அமைப்பின் தலைவர் அமரர் திரு யோகேந்திரா துரைசுவாமி ஆகியோரின் பங்களிப்புடன் 1993 இல் பழைய மாணவர் சங்கமானது மீளப் புதுப்பிக்கப்பட்டது.

இவர்கள்  பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு வரைதல்  இனங்காணப்பட்ட மாணவியருக்கான கல்வி நிதி உதவி ஒழுங்கு முறைகள் உருவாக்குவதிலும் பங்களிப்புச் செய்தனர். பழைய மாணவர் சங்கத்தின் வெற்றிப் பாதைக்கு முன்னாள் அதிபர்களான திருமதி ஞானேஸ்வரி பாலச்சந்திரன், திருமதி பத்மா கஜேந்திரதாஸ், அமரர் திருமதி சசிதேவி சிவநேசன் , செல்வி சாந்தினி வேலுப்பிள்ளை ஆகியோரின்  ஊக்குவிப்பு  மற்றும் ஒத்துழைப்பும் ஒரு மிக முக்கிய காரணமாகும்.

திருமதி கஜேந்திரதாஸினால் சங்கத்தின்  2012 இல்  முதலாவது நடைபவனி ஆரம்பிக்கப்பட்டதுடன் பழைய மாணவர் சங்கத்திற்கு  அதனை சிறப்பாக பாரியளவில் நடாத்துவதற்கான ஊக்குவிப்பும் வழங்கப்பட்டது. அத்துடன் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களையும் பழைய மாணவர் சங்கத்தில் சேருமாறும் அறிவுறுத்தப்பட்டது. திருமதி சிவநேசனால் உறுப்பினர் இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில்  நற்சான்றிதழை பெற்றுக்கொள்ளும் முன்பாக பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவம் பெறும்படி கோரிக்கை விடப்பட்டது.

முன்னாள் அதிபர்களின் சேவையை கௌரவிக்கும் முகமாக பழைய மாணவர்   தேவைப்பாடுள்ள இனங்காணப்பட்ட மாணவியருக்கான கல்வி நிதி உதவியின் கீழ் செல்வி காசிப்பிள்ளை, செல்வி ஆறுமுகம்,  திருமதி சிவநேசன் ஆகியோரின் பெயர்களில் மூன்று புலமைப்பரிசில் திட்டமும் அறிமுகப்படுத்தி வைக்ககப்பட்டது. 

  80 - 85 ஆவது வருட நடைபவனி  (2012 & 2017) 
பாடசாலை மாணவர்கள், பழைய, நடைமுறை ஆசிரியர்கள், சைவ மங்கையர் கழகத்தின் பழைய, நடைமுறை உறுப்பினர்கள், பெற்றோர்களின் பாரிய பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் நடந்தேறிய பெரும் பொது நிகழ்வுகள் என இவை இரண்டையும் குறிப்பிடலாம்.

2012 இல் Walk for the  Green Future என்ற வாசகத்தை அடிப்படையாகவும் 2017 இல் Drenched with Pride என்ற வாசகத்தை அடிப்படையாகவும் கொண்டு 80 ஆவது  85 ஆவது வருட நடைபவனிகள் இடம்பெற்றன. 85 ஆவது நடைபவனியின் பிற்பாடு மத்திய பிரிவின் புதிய கட்டிடத்தில் தளபாட வசதிகளுக்கான நிதி உதவியாக ஒரு மில்லியன் ரூபா   பழைய மாணவர் சங்கத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

 பழைய மாணவர் சங்கத்தின் முக்கியமான செயற்றிட்டங்கள் 
1994 இல் இருந்து பழைய மாணவர் சங்கம்,  வித்தியாலயம்  அதன் மாணவர்களுக்கான உதவிகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டுள்ளது. பழைய விஞ்ஞான ஆய்வு கூடத்தின் மீள்நிர்மாணப் பணிகள் (  2 மில்லியன் ரூபா ), ஆரம்பப்பிரிவிற்கான மேலதிக மலசலகூட நிர்மாணம் (   800, 000 ரூபா)   அதிபர் அறையின் மீள் நிர்மாணப் பணிகள் (  800,000ரூபா) என்பன பழைய மாணவர் சங்கத்தின் மிக முக்கிய பங்களிப்புக்களாகும்.

 குழு -  
 எமது முதலாவது தலைவரான ரூபராணி கணேசநாதன்  குழுவினை 2003 இல் அவுஸ்திரேலியா செல்லும் வரையில் கிட்டத்தட்ட பத்து வருடகாலமாக வழிநடத்தி வந்தார். அதன்பின்னர் திருமதி சரோஜினி கணேந்திரன்  தலைவராகத் தெரிவு செய்ய்ப்பட்டார். (உப தலைவர் 1993 - 2003)   திருமதி சரோஜினி கணேந்திரன் , திருமதி மாலதி சிவேந்திரன்( உப தலைவர் 1993 - 2018), திருமதி கலா நாகராஜா ( உப தலைவர் 2004 - 2018, துணை செயலாளர் 1993 - 2003), திருமதி யசோ குணசீலன் ( செயலாளர் 1993 - 2018),திருமதி சிவசெல்வி பாலச்சந்திரன் ( பொருளாளர் 1993 - 2018), திருமதி சந்திரதிலகம் பத்மநந்தன்( உதவிப் பொருளாளர் 1993 - 2003 , துணைப் பொருளாளர் 2003 - 2018) மற்றும் திருமதி வாமதேவி சிவபாலன் ( துணைப் பொருளாளர் 2003 - 2018) ஆகியோரின் துணையுடனும் ஒத்துழைப்புடனும் பல கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமது சேவையினை வழங்கியிருந்தனர். 
 குழுவின் ஏனைய உறுப்பினர்களது பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது. அதன் அளவைக் கருத்திற்கொண்டு ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய விபரங்கள் வேறாக இணைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியக் கிளை
பழைய மாணவர் சங்கத்தின் இக்கிளையானது 2015இல் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.  20 வயது தொடக்கம் 70 வயது வரையான பழைய மாணவர்கள் இக் கிளையின் வருடாந்த , மாதாந்த குழுக் கூட்டங்களில் பங்குபற்றினர். திருமதி தமயந்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக் கிளையானது தமது செயற்றிட்டங்களில் திறம்பட செயலாற்றியது.

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு, அதில் பங்குபெற விரும்புபவர்கள் smv.ppa@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடனோ அல்லது 077-7588981 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாம். 

பழைய மாணவர் சங்க கனடா கிளை  2016 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. இவ்வாறு கிளைகள் அமைத்து பெண்களின் கூட்டு முயற்சியினால் வளமாகவும் பலமாகவும் தொடர்ந்து தனது  பல சேவைகளை சைவமங்கையர் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் வழங்க வேண்டும் என்பது மேலும் பல ஆண்டு விழாக்களை காண வேண்டும் எனவும் வாழ்த்துவோம். 
சுவாதி


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images