தொடர் தோல்வியில் தொடரும் ஒப்பந்தம் - ஜீவா சதாசிவம்

அலசல் August 31, 2018
ஒவ்வொரு நினைவு தினங்களும் சில விடயங்களை அவ்வப்போது நினைவுபடுத்துவதைப்போலவே, இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை வரும் கூட்டு ஒப்பந்தமும். தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில்  2016ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதமளவில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களை கடந்து அதனை மீண்டும் மேலும் இரண்டு வருடங்களுக்கு புதுப்பிப்பதற்கான  முதலாவது சந்திப்பும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இடம்பெற்று எவ்வித இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.  இந்த இணக்கப்பாடு இல்லாத விடயம் புதுமையானதல்ல என்பது யாவரும் அறிந்ததே. ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கு ஒருமுறையிலான சந்திப்பும் 'இணக்கப்பாடு' இன்றியே முடிவடைந்து திடீரென 'இணக்கப்பாடு' என்ற நிலையில் 'குறைந்தளவிலான...

கிராமம் அமைகிறது 'சமுதாயம்' எங்கே? - ஜீவா சதாசிவம்

அலசல் August 23, 2018
2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசு அப்படியே இன்று இல்லாத போதும் 'நல்ல ஆட்சி'  அரசாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி அதன் வழி; நான் தனிவழி என ஜனாதிபதியே அறிவித்திருப்பதானது தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் குளறுபடி உள்ளதை உறுதிப்படுத் துகின்றது. இந்த அரசாங்கத்தை உருவாக்குவதில் அல்லது முன்னைய அரசாங்கத்தை மாற்றுவதில் இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகித்தன.  குறிப்பாக மலையகப் பகுதிகளுக்கு ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வருகை தந்து வாக்கு கேட்காதபோதும் ஆவலுடனும் பல எதிர்பார்ப்புக்களுடனும் மக்கள்...

நாட்கூலிக்காக ஜீவ மரணபோராட்டமா? - ஜீவா சதாசிவம்

அலசல் August 17, 2018
ஒரு சமூகம் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு நாள் ஜீவனோபாயத்துக்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றது. ஒரு முறைசார் முன்னணி தொழில்துறையான பெருந்தோட்ட முறையிலேயே இந்தத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இதனை காலங்காலமாக செய்து வருவது ஒரு புதிய விடயமல்ல. எனினும் அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்டத்தில் 11/08/2018 முதல் 14/08/2018 வரை இடம்பெற்றுவந்த உணவுத் தவிர்ப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு வித்தியாசமான கவனயீர்ப்பைக் கொடுத்திருந்தது. தொழிலாளியின் ஜீவனோபாயத்துக்கான ஜீவ மரண போராட்டமாகவே இப்போராட்டம் அமைந்திருந்தமை வேதனைக்குரிய விடயமாகும். சவப்பெட்டியில் உயிருடன் தன்னுடைய உடலை வைத்து தனது ஜீவனோபாயத்துக்காக தொழிலாளர்கள்...

'டிஜிட்டல்' அச்சு ஊடகத்துக்கு சவாலா? - ஜீவா சதாசிவம்

இலக்கியம் August 12, 2018
இலங்கைத் தமிழ் பத்திரிகை உலகில் மாத்திர மல்ல, தமிழ் பத்திரிகை உலகில் வீரகேசரிக்கு என தனியான இடமுண்டு. அது அதன் வயதோடும் அனுபவத்தோடும் தொடர்புடையது. இலங்கையின் மூத்த தமிழ் பத்திரிகையாகவும் தினம் தன் வீடு வரும் விருந்தாளியாக நாளாந்தம் வாசகர்கள் வீட்டுக்கதவைத் தட்டும் வாஞ்சை கொண்டது. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பே இலங்கை யில் வாழ்ந்த இந்தியத் தமிழ் சமூகத்தினரால் தொடங்கப்பட்ட வீரகேசரி ஆரம்ப காலங்களில் இந்திய பத்திரிகை கலாசாரத்துடன் தொடர்புடையதாகவே வளர்க்கப்பட்டு வந்துள்ளது.  இந்த எண்தொன்பதாவது ஆண்டு பயணத்தில் இந்திய செல்நெறியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு தனித்துவமான பத்திரிகையாக...

வாசகர்களின் வார்த்தைகளில் வீரகேசரி - ஜீவா சதாசிவம்

இலக்கியம் August 12, 2018
பத்திரிகையை ஆரம்பிப்பது இலகுவாக இருக்கலாம். ஆனால்,  அதனை  பல தசாப்த காலமாக வாசகர்களின்  மனதில் தக்கவைத்துக் கொள்வதே பெரும் சவால். அந்தவகையில் 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 6 ஆம் திகதி சுப்பிரமணிய செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட 'வீரகேசரி' இன்று ஆலவிருட்சம் போன்று வளர்ந்து பல கிளைகளாகப் படர்ந்துள்ளது.  ஒன்பதாவது தசாப்தத்தை எட்டி நூற்றாண்டில் கால்பதிப்பதற்கு வீறுநடை போடும் 'வீரகேசரி' கடந்து வந்த பாதையில் பல தடங்கல்கள் இருந்தாலும்  வீரகேசரியின் இதயமான  வாசகர்களுடன்  அவர்களுக்குப் பத்திரிகைகளை கொண்டு செல்கின்ற இன்னொரு இதயமான விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பு ...

பிரேம்சந்த் வென்ற சாந்தன் - ஜீவா சதாசிவம்

இலக்கியம் August 07, 2018
   இந்திய சாகித்திய அகாடமியினால் ஆண்டு தோறும் வழங்கப்படும் பெருமை மிக்க பிரேம்சந்த் விருது (Premchand Fellowship) இவ்வாண்டு  நம்நாட்டு எழுத்தாளர் ஐ.சாந்தனுக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் இலங் கைக்கும் அவர் பெருமை சேர்த்துத் தந்துள்ளார். இந்திய இலக்கிய மேதைகளில் ஒருவரான பிரேம்சந்த் நினைவாக 1996 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த  கௌரவமானது ஆண்டுதோறும் சார்க் நாடுகளுக்கிடையே இலக்கியம்-, பண்பாடு ஆகியவற்றில் தனித்துவமான பங்களிப்புச் செய்தவர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து  வழங்கப்பட்டு வருகிறது. இவ்வருடம் இவ் விருதைப் பெற்றிருக்கும் சாந்தன் இலங்கையின் முன்னணி இருமொழி எழுத்தாளராவார்.  இலக்கியம் படைப்பவர்களான சுமதி சிவமோகன்...

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images