இலங்கையின் தமிழ் சினிமாத்துறை என்பதே பிழையான வார்த்தைப் பிரயோகம் - ஜீவா சதாசிவம்
இலக்கியம் March 26, 2018 ஊடகத்துறையில் சிறந்த ஆளுமையாகவும் ஊடகத்துறையின் விரிவுரையாளராகவும் வலம் வந்தவர் தான் நடராஜா மணிவாணன். மலையகத்தின் பண்டார வளையை பிறப்பிடமாகக் கொண்டு தனது கல்வியையும் தனது பிறப்பிடத்திலேயே பெற்றுக்கொண்ட மணிவாணன் தற்போது இளம் இயக்குனராகவும் வலம் வருகின்றார். அதன் முதலாவது அடையாளமாக 'முதற்கனவே' தொலைக்காட்சி குறுந்தொடரை குறிப்பிடலாம். தான் என்றாவது ஒரு நாள் இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்று சுமார் எட்டு வருட கால மனப்போராட்டத்தின் மத்தியில் இடைவிடாது செய்த முயற்சி எட்டு மாதங்களில் கைகூடியுள்ளது. ஆம்... அவரது 'முதற்கனவே' என்னும் முதன்மை தமிழ் மொபைல் தொலைக்காட்சிக் குறுந்தொடர் ...